1778
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1778 (MDCCLXXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 18 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது பசிபிக் பயணத்தின் போது ஹவாயில் கைவை மற்றும் ஓவாஹி தீவுகளைக் கண்டான்.
- பெப்ரவரி 23 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரன் வொன் ஸ்டூபன் பென்சில்வேனியா வந்து அமெரிக்கப் படைகளுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.
- மே 1 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
- ஜூன் 18 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன.
- ஜூன் 24 - அமெரிக்காவில் டெக்சாஸ், வேர்ஜீனியாவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.
- ஜூலை 3 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் வயோமிங் நகரில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.
- ஜூலை 10 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானொயா மீது போர் தொடுத்தான்.
- அக்டோபர் 3 - கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினான்.
- நவம்பர் 11 - மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
- நவம்பர் 26 - கப்டன் ஜேம்ஸ் குக் ஹவாய் தீவுகளின் மைவி தீவை அடைந்தான்.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- அமெரிக்காவின் கெண்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் முதலாவது குடியேற்றம் ஆரம்பமானது.
பிறப்புகள்
இறப்புகள்
- ஜனவரி 10 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)
1778 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads