மே 1 (May 1) கிரிகோரியன் ஆண்டின் 121 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 122 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன.
- 305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
- 524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார்.
- 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது.
- 1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
- 1576 – திரான்சில்வேனியா இளவரசர் இசுட்டீவன் பாத்தரி, அன்னா ஜாகியலனைத் திருமணம் புரிந்தார். இருவரும் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் இனை ஆட்சியாளர்களாயினர்.
- 1707 – இங்கிலாந்தும், இசுக்கொட்லாந்தும் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்கும் ஒன்றிணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- 1753 – தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1776 – இல்லுமினாட்டி குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
- 1794 – பிரெஞ்சுப் படையினர் எசுப்பானியரைத் தோற்கடித்து, 1793 இல் தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர்.
- 1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.
- 1840 – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
- 1844 – ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் காவல் துறை அமைக்கப்பட்டது.
- 1851 – லண்டனில் பளிங்கு அரண்மனையில் பெரும் கண்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டு இராணுவம் நியூ ஓர்லென்சைக் கைப்பற்றியது.
- 1865 – பிரேசில் பேரரசு, அர்கெந்தீனா, உருகுவை ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
- 1866 – அமெரிக்காவில் மெம்பிசு இனக்கலவரம் ஆரம்பமானது. மூன்று நாட்களில் 46 கறுப்பர்களும், இரண்டு வெள்ளையினத்தவரும் கொல்லப்பட்டனர்.
- 1875 – 1873 இல் எரிந்து அழிந்த இலண்டன் அலெக்சாந்திரா அரண்மனை மீண்டும் அமைக்கப்பட்டது.
- 1884 – ஐக்கிய அமெரிக்காவில் எட்டு-மணிநேர வேலை நாள் வேண்டி பொது அறிவிப்பு வெளியானது.
- 1886 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1891 – பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.
- 1893 – உலக கொலம்பியக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.
- 1900 – ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.
- 1915 – லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – செருமனியப் படைகள் பவேரிய சோவியத் குடியரசை அழிக்கும் பொருட்டு மியூனிக் நகரினுள் நுழைந்தன.
- 1925 – சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.
- 1929 – 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஈரான்–துருக்மெனிஸ்தான் எல்லையைத் தாக்கியதில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.
- 1930 – குறுங்கோள் புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 1931 – நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
- 1940 – கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படை துப்ருக் முற்றுகையை ஆரம்பித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: 200 கம்யூனிசக் கைதிகள் ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் இறந்ததை செருமனியின் செய்தி வாசிப்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் பெர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ், அவரது மனைவி மேக்டா பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது பிள்ளைகளும் தாயினால் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து செருமனியின் தெம்மின் என்ற இடத்தில் 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டனர்.
- 1946 – மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆத்திரேலியத் தொல்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
- 1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.
- 1956 – யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1956 – மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1957 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.
- 1960 – இந்தியாவில் குசராத்து, மகாராட்டிரம் மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
- 1961 – கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
- 1977 – தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
- 1978 – சப்பானியர் நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.
- 1987 – இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு இதித் ஸ்டைன் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.
- 1989 – இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.
- 1993 – இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார். டி. பி. விஜயதுங்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1999 – 1924 இல் காணாமல் போன பிரித்தானிய மலையேறி ஜார்ஜ் மலோரியின் உடல் எவரெஸ்டு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2004 – சைப்பிரசு, செக் குடியரசு, எசுத்தோனியா, அங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
- 2009 – சமப்பால் திருமணம் சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.
- 2011 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதப்படுத்தப்படுத்தப்பட்டார்.
- 2011 – பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1326 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1332)
- 1769 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1852)
- 1852 – சான்டியாகோ ரமோன் கஸல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (இ. 1934)
- 1875 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர் (இ. 1960)
- 1913 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி (இ. 1985)
- 1913 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (இ. 1973)
- 1919 – மன்னா தே, இந்தியப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2013)
- 1927 – இராசம்மா பூபாலன், மலேசிய விடுதலைப் போராளி, பெண்ணியவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, கல்வியாளர்
- 1944 – சுரேஷ் கல்மாடி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
- 1950 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (இ. 2012)
- 1951 – கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
- 1958 – சாலிந்த திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி (இ. 2019)
- 1971 – அஜித் குமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1974 – கஸ்தூரி, இந்தியத் திரைப்பட நடிகை
- 1988 – அனுஷ்கா சர்மா, இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை
- 1521 – துவார்த்தே பர்போசா, போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480)
- 1555 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501)
- 1572 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)
- 1873 – டேவிட் லிவிங்ஸ்ட்டன், ஆங்கிலேய மதப்பரப்புனர், நாடுகாண் பயணி (பி. 1813)
- 1904 – அன்டனின் டுவோராக், செக் இசையமைப்பாளர் (பி. 1841)
- 1945 – ஜோசப் கோயபெல்ஸ், செருமானிய அரசுத்தலைவர் (பி. 1897)
- 1959 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (பி. 1890)
- 1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)
- 1980 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1962)
- 1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கையின் 3வது அரசுத்தலைவர் (பி. 1924)
- 1994 – அயர்டன் சென்னா, பிரேசில் கார்ப் பந்தய வீரர் (பி. 1960)
- 2005 – முத்துக்கூத்தன், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடலாசிரியர், வில்லுப்பாட்டுக் கலைஞர் (பி. 1925)
- 2006 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1916)
- 2011 – அலெக்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 2011 – உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)
- 2012 – சண்முகசுந்தரி, தமிழ்த் திரைப்பட நடிகை
- 2021 – ஹெலன் மர்ரே பிரீ, அமெரிக்க வேதியியலாளர் (பி. 1923)
- 2024 – உமா ரமணன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1954)