2024
அடுத்த நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
2024 ஆம் ஆண்டு (MMXXIV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். இது பொ.ஊ. 2024-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 24-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 24-ஆவது ஆண்டும், 2020களின் ஐந்தாவது ஆண்டும் ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2024 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2024 MMXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 2055 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2777 |
அர்மீனிய நாட்காட்டி | 1473 ԹՎ ՌՆՀԳ |
சீன நாட்காட்டி | 4720-4721 |
எபிரேய நாட்காட்டி | 5783-5784 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2079-2080 1946-1947 5125-5126 |
இரானிய நாட்காட்டி | 1402-1403 |
இசுலாமிய நாட்காட்டி | 1445 – 1446 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 36 (平成36年) |
வட கொரிய நாட்காட்டி | 113 |
ரூனிக் நாட்காட்டி | 2274 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4357 |
2024 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு, மியான்மர் உள்நாட்டுப் போர், சூடான் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பாரிய ஆயுத மோதல்கள் தொடர்ந்தன. நவம்பரில், சிரிய உள்நாட்டுப் போரில் கடுமையான சண்டை மீண்டும் தொடங்கியது, இது பாத்திஸ்ட் சிரியாவை வீழ்த்த வழிவகுத்தது, திசம்பரில் பசார் அல்-அசத் சிரியாவை விட்டு வெளியேறினார்.
காசா மீதான இசுரேலின் போர் பல நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தியது, குறிப்பாக அக்டோபரில் லெபனான் இசுரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. முந்தைய மாதத்தில், இசுரேல் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதலை அதிகரித்தது, அதன் தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி, பொதுச் செயலாளர் அசன் நசுரல்லாவைக் கொன்றது.[1] சூலை மாதம் தெகுரானில் அமாசின் அரசியல் தலைவர் இசுமாயில் அனியே படுகொலை செய்யப்பட்டார். நடந்து வரும் மோதல் போருக்கு எதிராக பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது.[2] இந்த ஆண்டு ஹவுத்தி இயக்கத்தின் செயல்பாடு அதிகரித்தது, இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதித்த செங்கடலில் நெருக்கடிக்குப் பங்களித்தது.
கிட்டத்தட்ட 80 நாடுகளில் தேசிய பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.[3] இலங்கையில், முன்னர் ஒரு சிறிய கட்சியாக இருந்த இடதுசாரி தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர்.[4][5]
நிகழ்வுகள்
சனவரி
- சனவரி 1
- எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்சில் உறுப்புரிமை பெற்றன.[6]
- அசர்பைசான் நாகோர்னோ-கராபக்கை மீளக் கைப்பற்றியதை அடுத்து நகோர்னோ கரபாக் குடியரசு கலைக்கப்பட்டது.[7]
- 7.5 Mww அளவு நிலநடுக்கம் சப்பானின் மேற்குக் கரையைத் தாக்கியதில் 504 பேர் உயிரிழந்தனர்.[8]
- சனவரி 14
- டென்மார்க்கின் ராணியாக இரண்டாம் மார்கிரெத் தனது 52-வது ஆண்டு நிறைவில் முறையாகப் பதவி விலகினார், அவரது மூத்த மகன் அவருக்குப் பிறகு பத்தாம் பிரெடெரிக்காக மன்னராகப் பதவியேற்றார்.[9]
- சனவரி 19 – சப்பான் தனது சிலிம் திட்டத்தின் மூலம் நிலாவில் மெதுவாகத் தரையிறங்கிய 5-ஆவது நாடானது.[10]
- சனவரி 24 – 65 உக்ரைனியப் போர்க்கைதிகளுடன் சென்ற உருசியாவின் ஐ.எல்-76 இராணுவ வானூர்தி கொரச்சான்சுக்கி மாவட்டத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 74 பேரும் உயிரிழந்தனர்.[11]
- சனவரி 31 – ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுக்காந்தர் 17-ஆவது மலேசிய மன்னராக முடிசூடினார்.[12]
பெப்ரவரி
- பெப்ரவரி 4
- பெப்ரவரி 6 – சிலியின் முன்னாள் தலைவர் செபஸ்டியான் பினேரா உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.[13]
- பெப்ரவரி 22 அமெரிக்காவின் நோவா-சி நிலாவில் தரையிறங்கிய முதலாவது வணிக விண்கலமானது.[14]
மார்ச்
- மார்ச்சு 7 – சுவீடன் நேட்டோ அமைப்பில் 32-ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.[15]
- மார்ச்சு 13 – செயற்கை நுண்ணறிவுக்கான முதலாவது சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்தது.[16]
- மார்ச்சு 31 – பல்காரியா, உருமேனியா ஆகிய நாடுகள் செங்கன் பகுதியில் இணைந்தன.[17]
ஏப்பிரல்
மே
- மே 10 – ஐநா பொதுச் சபை பலத்தீன் அரசுக்கு அகர வரிசைப்படி உறுப்பு நாடுகளிடையே அமரும் உரிமையை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.[19]
- மே 19 – ஈரானிய அரசுத்தலைவர் இப்ராகிம் ரையீசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.[20]
- மே 24 – பப்புவா நியூ கினி நிலச்சரிவில் 160–2,000+ பேர் உயிரிழந்தனர்.[21]
- மே 28 – எசுப்பானியா, அயர்லாந்து, நோர்வே ஆகியன பலத்தீனத்தை அங்கீகரித்தன.[22]
சூன்
- சூன் 1 – 2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மக்களவையில், பாசக தனது பெரும்பான்மையை இழந்தது, ஆனாலும் அதன் தேர்தல் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[23]
சூலை
- சூலை 22 – எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 257 பேர் உயிரிழந்தனர்.[24]
- சூலை 30 – 2024 வயநாட்டு நிலச்சரிவுகள்: கேரளம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 334 பேர் உயிரிழந்தனர்.[25]
- சூலை 31 – ஹமாஸ் அரசியல் தலைவர் இசுமாயில் அனியே தெகுரானில் அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.[26]
செப்டம்பர்
- செப்டம்பர் 21 – இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024: அனுர குமார திசாநாயக்க இலங்கை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27]
- செப்டம்பர் 27 – இசுரேலிய வான்படையின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் அசன் நசுரல்லா கொல்லப்பட்டார்.[28]
அக்டோபர்
- அக்டோபர் 16 – ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் ரஃபாவில் இசுரேலியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[29]
நவம்பர்
- நவம்பர் 5
- 2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்: டோனால்ட் டிரம்ப், இரண்டாவது தடவையாக அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.[30]
- நவம்பர் 14 – இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024: அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.[31]
திசம்பர்
- திசம்பர் 7
- 2019 தீ விபத்தில் சேதமடைந்த நோட்ரே-டாம் பேராலயம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.[32]
- திசம்பர் 8 – சிரிய உள்நாட்டுப் போர்: சிரியா அரசுத்தலைவர் பசார் அல்-அசத் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[33]
- திசம்பர் 11 – 2030 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை மொரோக்கோ, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் என பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. சவூதி அரேபியா 2034 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும்.[34]
- திசம்பர் 12 – இந்தியாவின் சதுரங்க மேதை குகேசு தொம்மராசு தனது 18-ஆவது அகவையில் 2024 உலக சதுரங்க வாகையாளரானார்.[35]
- திசம்பர் 24 – பார்க்கர் சூரிய ஆய்கலம் சூரியனுக்கு 6.1 மில்லியன் கிமீ தூரத்திற்குச் சென்று சாதனை படைத்தது.[36]
- திசம்பர் 25 – அசர்பைசான் ஏர்லைன்சு வானூர்தி கசக்கசுத்தானில் விபத்துக்குள்ளானதில் 67 பேரில் 29 பேர் உயிர் தப்பினர்.[37][38]
- திசம்பர் 29 – தென் கொரியாவின் சேஜு ஏர் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர், இருவர் உயிர் தப்பினர்.[39]
நோபல் பரிசுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.