Remove ads
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
வயநாடு (வயல்நாடு) மாவட்டம் இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு இது 1980-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் திகதி கேரளாவின் 12-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் பல பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.[8]
வயநாடு மாவட்டம்
வயல்நாடு மாவட்டம் | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: செம்பரா மலைமுடி, வயநாடு வனவிலங்கு காப்பகம், சுல்தான் பத்தேரியில் உள்ள வணிக வளாகம், நெல் வயல், காராப்புழா அணையின் நுழைவாயில், எடக்கல் குகைகள். | |
சொற்பிறப்பு: வயல் நாடு: நெல் வயல் நிலம்[1] | |
குறிக்கோளுரை: "Way Beyond"[2] | |
கேரளத்தில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள் (கல்பற்றா): 11.605°N 76.083°E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | வடக்கு கேரள |
நிறுவப்பட்டது | 1980 நவம்பர் 1 |
தோற்றுவித்தவர் | கேரள அரசு |
தலைமையிடம் | கல்பற்றா |
வட்டம் | மானந்தவாடி சுல்தான் பத்தேரி வைத்திரி |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. ஏ.கீதா, இ.ஆ.ப.[3] |
• மாவட்ட காவல்துறை தலைவர் | திரு. ஆர்.ஆனந்த், இ.கா.ப.[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,130 km2 (820 sq mi) |
உயர் புள்ளி | 2,240 m (7,350 ft) |
தாழ் புள்ளி (சாலிப்புழா ஆறு, மலப்புறம் எல்லை) | 108 m (354 ft) |
மக்கள்தொகை (2018)[5] | |
• மொத்தம் | 8,46,637 |
• அடர்த்தி | 397/km2 (1,030/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 670 xxx, 673 xxx |
தொலைபேசி குறியீடு[6] | +91—
|
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL-12 கல்பற்றா, KL-72 மானந்தவாடி, KL-73 சுல்தான் பத்தேரி |
ம.மே.சு. (2005) | 0.753[7] ( உயர்) |
இணையதளம் | wayanad |
இது மூன்று வட்டங்களைக் கொண்டுள்ளது.[9]
கல்பற்றா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி ஆகியவை பெரிய நகரங்களாகும்.
இந்த மாவட்டத்தை மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பற்றா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்திருக்கின்றனர்.[9]
இந்த மாவட்டத்தின் பகுதிகள் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[9]
சட்டமன்ற தொகுதி எண் | சட்டமன்ற தொகுதிகள் | (பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | மக்களவை தொகுதி எண் | மக்களவை தொகுதிகள் | (பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|
17 | மானந்தவாடி | பட்டியல் பழங்குடி | 4 | வயநாடு | எதுவுமில்லை |
18 | சுல்தான் பத்தேரி | ||||
19 | கல்பற்றா | எதுவுமில்லை |
வயநாடு அம்பலவயல் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பூப்பொலி என்ற பெயரில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக 12 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு சனவரி 1 முதல் 18 வரையில் நடைபெறும் மலர் கண்காட்சியில் 1,640 வகை ரோஜாக்கள், 1,200 வகை டேலியா மலர்கள், 15 வகை கிளாடியோஸ் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது.[10]
30 சூலை 2024 அன்று இரவில் கொட்டிய கனமழையால் மாவட்டத்தின் முண்டக்கை, சூரமலை, மேப்பாடி மற்றும் அட்டமலை கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 5 ஆகஸ்டு 2024 வரை 358 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 200இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டது. நிலச்சரிவிலிருந்து மக்களை மீட்பதற்கு மாநில, தேசியப் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இருந்தனர்.[11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.