செங்கடல்
கடல் From Wikipedia, the free encyclopedia
கடல் From Wikipedia, the free encyclopedia
செங்கடல் (Red Sea) ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடென் வளைகுடாவும் இணைக்கின்றன. வடக்கே சினாய் குடா, அக்காபா வளைகுடா, சூயெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன.[1][2][3]
செங்கடல் | |
---|---|
ஆள்கூறுகள் | 22°N 38°E |
அதிகபட்ச நீளம் | 2,250 km (1,400 mi) |
அதிகபட்ச அகலம் | 355 km (221 mi) |
மேற்பரப்பளவு | 438,000 km2 (169,000 sq mi) |
சராசரி ஆழம் | 490 m (1,610 அடி) |
அதிகபட்ச ஆழம் | 2,211 m (7,254 அடி) |
நீர்க் கனவளவு | 233,000 km3 (56,000 cu mi) |
செங்கடலின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 174,000 சதுர மைல்களாகும். கிட்டத்தட்ட 1,900 கிமீ நீளமும், 300 கிமீ அகலமும் கொண்டது. இதன் அதிகூடிய ஆழம் 2,500 மீட்டர்கள் ஆகும்.
செங்கடலை கிரேக்க மொழியில் Erythra thalassa (எரித்ர தலசா) என்றும், இலத்தின் மொழியில் Mare Erythraeum (மரே எரித்ரயம்) என்றும் குறிப்பிடப்படுவதால் முன்பு இதனை எரித்ரயன் சீ (Erithreyan sea) என்று அழைப்பர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.