From Wikipedia, the free encyclopedia
பொருளியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Economics) என்று பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு (Nobel Memorial Prize in Economic Sciences)[1] பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும்.[2] இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது. [3] இதன் அலுவல் முறையிலான பெயர் சுவிரிஜெஸ் வங்கியின் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobe) (சுவீடிய: Sveriges riksbanks pris i ekonomisk vetenskap till Alfred Nobels minne).
பொருளியலுக்கான ஆல்பிரெட் நோபல் நினைவு சுவெரிஜெஸ் ரிக்ஸ்பாங்க் பரிசு | |
---|---|
விளக்கம் | பொருளியல் கொள்கைகளில் சீர்மிகு பங்களிப்பு |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | அறிவயலுக்கான சுவீட அரச அகாதெமி |
முதலில் வழங்கப்பட்டது | 1969 |
இணையதளம் | http://nobelprize.org |
இது 1895 ஆம் ஆண்டு நோபலின் உயிலின்படி நிறுவப்பட்ட நோபல் பரிசு அல்ல. இருப்பினும் பொதுவாக அவற்றுடனேயே அடையாளப்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7] பொருளியல் பரிசு என்று நோபல் நிறுவனத்தால் குறிப்பிடப்படும் இது 1968ஆம் ஆண்டில் சுவீடனின் நடுவண் வங்கியான சுவரஜஸ் ரிக்ஸ்பாங்க்கின் 300ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது நோபலின் நினைவாக அந்த வங்கியின் நிதிக்கொடை கொண்டு நிறுவப்பட்டதாகும். [3][8][9][10] இயற்பியல், வேதியியல் போன்றே இந்தப் பரிசினைப் பெறுவோரையும் சுவீடனின் அறிவியலுக்கான அரச அகாதெமி தேர்ந்தெடுக்கிறது. [11][12]
1969ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தப் பரிசு டச்சு மற்றும் நோர்வீஜிய பொருளியலாளர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[[10][13][14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.