Remove ads
From Wikipedia, the free encyclopedia
பளிங்கு அரண்மனை (The Crystal Palace) என்பது லண்டனில் ஹைட் பார்க் என்ற இடத்தில் 1851 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய ஒரு கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும்.[1] உலகெங்கணும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர்.[1] ஜோசப் பாக்ஸ்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகை 1850 அடி (564 மீ) நீளமும் 110 அடி (34 மீ) உயரமும், உள்ளுயரம் 408 அடியும் (124 மீ) கொண்டது.[1]
கண்காட்சிக்குப் பின்னர் இம்மாளிகை இலண்டனில் உள்ள "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு முதல் 1936 நவம்பர் 30 இல் இம்மாளிகை தீயில் எரிந்து சாம்பலாகும் வரை இவ்விடத்திலேயே இருந்தது.
பளிங்கு அரண்மனையின் கட்டுமானப் பணிக்கென ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் (ஒரே நேரத்தில் 2,000 பேர்) பங்கு பெற்றிருந்தனர்.[2] 900,000 சதுர அடி (84,000 மீ²) கண்ணாடி பயன்படுத்தப்பட்டது.
கண்காட்சி ஆறு மாதங்கள் வரை இடம்பெற்றது. கண்காட்சியின் முடிவில் நாடாளுமன்ற எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இம்மாளிகையை "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு மாற்றும் முடிவு நாடாளுமன்றத்தினால் எடுக்கப்பட்டு,[3] இரண்டே ஆண்டுகளில் இடம் மாற்றப்பட்டது. விக்டோரியா மகாராணி மீண்டும் இதனைப் புதிய இடத்தில் 1854 ம் ஆண்டில் திறந்து வைத்தார்.[1] புதிய இடத்தில் இது ஒரு நிரந்தர கண்காட்சிக்கூடமாக மாற்றப்பட்டது. இம்மாளிகையை ஆரம்ப இடத்தில் கட்டுவதற்கு £150,000 செலவு ஏற்பட்டது. ஆனால் இதனை இடமாற்றுவதற்கு மட்டும் £1,300,000 செலவு செய்யப்பட்டது.[4]
1936 நவம்பர் 30 இல் இவ்வரண்மனைக்கு முடிவு வந்தது. சில மணி நேரங்களில் இவ்வரண்மனை நெரிப்பில் எரிந்து சாம்பலானது. இம்மாளிகை முறையாகக் காப்புறுதி செய்யப்படாததால் இதன் மீளமைப்புக்கான செலவைப் பெற முடியவில்லை.
இரண்டு பாரிய தண்ணீர்த் தாங்கிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. இரண்டாம் உலகப் போரின் போது நாசி செருமனியரினால் இலண்டன் இலகுவாக அடையாளங் காணப்படும் என்ற காரணத்தினால் இந்த இரு தாங்கிகளும் அழிக்கப்பட்டன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.