மேற்கு ஆஸ்திரேலியா
ஆசுத்திரேலியாவின் மேற்குப் பகுதியிலுள்ள மாநிலம் From Wikipedia, the free encyclopedia
ஆசுத்திரேலியாவின் மேற்குப் பகுதியிலுள்ள மாநிலம் From Wikipedia, the free encyclopedia
மேற்கு ஆத்திரேலியா (Western Australia) பரப்பளவில் ஆத்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆத்திரேலிய நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெட்ரோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியா | |||||
| |||||
புனைபெயர்(கள்): காட்டுப்பூ மாநிலம் அல்லது பொன் மாநிலம் | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் | |||||
தலைநகர் | பேர்த் | ||||
---|---|---|---|---|---|
அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
ஆளுநர் | கென் மைக்கல் | ||||
முதல்வர் | கொலின் பார்னெட் (லிபரல்) | ||||
நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
- கீழவை | 15 | ||||
- செனட் | 12 | ||||
மொத்த தேசிய உற்பத்தி (2008-09) | |||||
- உற்பத்தி ($m) | $156,603[1] (4வது) | ||||
- தலா/ஆள்வீதம் | $70,009 (1வது) | ||||
மக்கள்தொகை (சூன் 2009) | |||||
- மக்கள்தொகை | 2,236,900 (4th[2]) | ||||
- அடர்த்தி | 0.88/கிமீ² (7வது) 2.3 /சது மைல் | ||||
பரப்பளவு | |||||
- மொத்தம் | 26,45,615 கிமீ² 10,21,478 சது மைல் | ||||
- நிலம் | 25,29,875 கிமீ² 9,76,790 சது மைல் | ||||
- நீர் | 1,15,740 கிமீ² (4.37%) 44,687 சது மைல் | ||||
உயரம் | |||||
- அதிஉயர் புள்ளி | மெகாரி மலை 1,249 மீ (4,098 அடி) | ||||
- அதிதாழ் புள்ளி | |||||
நேரவலயம் | UTC+8 | ||||
குறியீடுகள் | |||||
- அஞ்சல் | WA | ||||
- ISO 3166-2 | AU-WA | ||||
அடையாளங்கள் | |||||
- Floral | சிவப்பு, பச்சை கங்காரு பாதம் (Anigozanthos manglesii)[3] | ||||
- பாலூட்டி | நும்பாட் (Myrmecobius fasciatus) | ||||
- பறவை | கறுப்பு அன்னம் (Cygnus atratus) | ||||
- தொல்லுயிர் | கோகோ மீன் | ||||
- நிறங்கள் | பொன் மற்றும் கறுப்பு | ||||
வலைத்தளம் | www.wa.gov.au |
ஆத்திரேலியாவின் முதல் மக்கள் சுமார் 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து வந்தனர். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலப்பரப்புக்கும் பரவினர். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத்தொடங்கிய வேளையில் இவர்கள் மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் சிறப்பான முறையில் பரவியிருந்தனர். இன ரீதியான, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் 77.5% ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர்: இவர்களுள் மிகப்பெரிய தனி இனம் ஆங்கிலேயர்களாவர். கணக்கெடுப்பின்படி,733,783 (32.7%)பேர் ஆங்கிலேயர்கள். இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலியர்கள் 624,259 (27.8%), ஐரியர்கள் 171,667 (7.6%), இத்தாலியர்கள் 96,721 (4.3%), இசுக்கொட்டியர்கள் 62,781 (2.8%), ஜெர்மானியர் 51,672 (2.3%), சீனர் 48,894 (2.2%) ஆகியோர் காணப்படுகின்றனர். 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் 58.496 ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் காணப்பட்டனர். இவர்கள் மக்கள்தொகையில் 3.1%தினராவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.