தன் சுற்றண்மையில் இருந்து வெளியேறாத நீர்மநிலைச் சம னிலையில் அமையும் கோளின் பொருள் From Wikipedia, the free encyclopedia
குறுங்கோள் (dwarf planet) என்பது சூரியனின் நேரடிச் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு வான்பொருள்[1] எனவும், அத்துடன் இதன் வடிவம் பொறிமுறை விசைகளால் அல்லாமல் புவியீர்ப்பு விசையினால் கட்டுப்படுத்தப்படும் அளவுக்கு பெரியதுமாகவும், ஆனால் தனது சுற்றுப்பாதைச் சூழலில் உள்ள வான்பொருட்களை நீக்காமலும் இருக்கும் ஒரு வான்பொருள் என பன்னாட்டு வானியல் ஒன்றியத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது.[2][3]
உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து குறுங்கோள்கள்:
|
நெப்டியூனைவிட அதிக தூரத்தில் புளூட்டோவை விட பருமனில் கூடிய பல வான்பொருட்கள் சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஏரிசு என்ற பெரும் வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், இவ்வகையான வான்பொருட்களுக்கு குறுங்கோள் என்ற பெயரை 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு வானியல் ஒன்றியம் சூட்டியது[1] இந்தப் புதிய வகைப்பாட்டின் படி, கோள்கள் தமது சுற்றுப்பாதைச் சூழலில் 'அண்மையிலுள்ள பொருட்களை' நீக்கக்கூடியதாகப் பெரிதாக இருக்க வேண்டும். அதேவேளையில் தமது ஈர்ப்பு விசையினால் கவர முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் வான்பொருட்கள் சிறிய சூரியக் குடும்பப் பொருட்கள் எனப்படுகின்றன. குறுங்கோள்கள் இந்த இரு வகைகளுக்கும் இடைப்பட்டவை ஆகும். கோள்கள் என்ற வகைக்குள் இருந்து குறுங்கோள்களை அகற்றும் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்துள்ளது. எரிசு மற்றும் ஏனைய குறுங்கோள்களைக் கண்டுபிடித்த மைக்கேல் பிரவுண் இம்முடிவை வரவேற்றுள்ளார்,[4][5][6], ஆனால் "குறுங்கோள்" என்ற பதத்தை 1990 ஆம் ஆண்டிலேயே கோடிட்டுக் காட்டிய[7] அலன் ஸ்டேர்ன் என்பவர் இம்முடிவை நிராகரித்துள்ளார்[8][9].
நமது சூரியக் குடும்பத்தில் தற்போது செரசு, புளூட்டோ, அவுமேயா, மெக்கேமேக், ஏரிசு ஆகிய ஐந்து குறுங்கோள்கள் இருப்பதை பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும், இவற்றில் செரசு, புளூட்டோ ஆகிய வான்பொருட்கள் மட்டுமே குறுங்கோள் என்ற வகைப்பாட்டுக்குள் இருப்பதற்கான போதியளவு தகவல்களைக் கொண்டுள்ளன. ஏரிசு புளூட்டோவை விடப் பெரிதாக இருப்பதால் அது குறுங்கோளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்டியூனுக்கு அப்பாலுள்ள விண்பொருட்களில் தனி ஒளித்தரம் +1 ஐ விட அதிகமாக உள்ள (குறைந்தது 838 கிமீ விட்டத்தைக் கொண்ட[10]) பெயரிடப்படாத விண்பொருட்கள், அவை குறுங்கோள்களாக இருக்கும் பட்சத்தில் பெயரிடப்படவேண்டும் என வானியல் ஒன்றியம் முடிவு செய்தது. இதன்படி, தற்போது அறியப்பட்டுள்ள மெக்கேமெக், அவுமேயா ஆகிய இரண்டும் தகுந்த பெயரிடப்பட்டு குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டன.
சூரியக் குடும்பத்தில் குறைந்தது மேலும் ஐம்பது குறுங்கோள்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான கைப்பர் பட்டையும் ஆராயப்படும் இடத்து 200 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், கைப்பர் பட்டைக்கு வெளியே சிதறிய பொருட்களையும் கருத்தில் கொண்டால் 2,000 இற்கும் அதிகமான குறுங்கோள்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
2011 இல், ஐந்து வான்பொருட்கள் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தினால் அதிகாரபூர்வமாக குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன,[11] சூரியனில் இருந்தான தூர வகைப்பாட்டில் இந்த ஐந்து குறுங்கோள்களும் வருமாறு:
குறுங்கோள்களின் சுழற்சிப் பண்புகள்[12] | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர் | சூரியக் குடும்பத்தில் பகுதி |
சுற்றுப்பாதை ஆரை (வாஅ) |
சுற்றுக்காலம் (ஆண்டு) |
சராசரி சுற்று வேகம் (கிமீ/செ) |
Inclination to ecliptic |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | Planetary discriminant | ||||
செரசு | சிறுகோள் பட்டை | 2.77 | 4.60 | 17.882 | 10.59° | 0.079 | 0.33 | ||||
புளூட்டோ | கைப்பர் பட்டை (புளூட்டினோ) | 39.48 | 248.09 | 4.666 | 17.14° | 0.249 | 0.077 | ||||
ஹௌமியா | கைப்பர் பட்டை (12:7) | 43.13 | 283.28 | 28.22° | 0.195 | 0.020 | |||||
மேக்மேக் | கைப்பர் பட்டை (கூபவானோ) | 45.79 | 309.9 | 4.419 | 28.96° | 0.159 | 0.02 | ||||
ஏரிசு | சிதறிய வட்டு | 67.67 | 557 | 3.436 | 44.19° | 0.442 | 0.10 |
இவற்றை விட மைக்கேல் பிறவுண் பின்வரும் நான்கு விண்பொருட்களை குறுங்கோள்களாக "கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்". ஆனால் இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை:
எந்தவொரு விண்கலங்களும் இதுவரை குறுங்கோள்கள் எதனையும் அடையவில்லை. நாசாவின் டோன் மற்றும் நியூ ஹரைசன்ஸ் ஆகிய விண்கலங்கள் முறையே செரசு, மற்றும் புளூட்டோவை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. டோன் செரசு குறுங்கோளின் சுற்றுவட்டத்துக்கும், நியூ ஹரைசன்ஸ் புளூட்டோவின் அருகிலும் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் 2015 ஆம் ஆண்டிலேயே தமது இலக்கை அடையவுள்ளன. டோன் 2011 சூலை 16 இல் "கிட்டத்தட்ட குறுங்கோள்" எனக் கருதப்படும் வெஸ்டாவின் சுற்றுவட்டத்துக்குள் நுழைந்தது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.