From Wikipedia, the free encyclopedia
பெரிய பிரித்தானிய இராச்சியம் அல்லது பெரிய பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் (Kingdom of Great Britain) என்பது, 1707-1801 ஆண்டுக் காலப்பகுதியில் வடமேற்கு ஐரோப்பாவில் இருந்த இறைமையுள்ள ஒரு நாடாகும். இது, 1707 ஆம் ஆண்டின் ஒன்றியச் சட்டமூலத்தின் அடிப்படையில், இசுக்காட்லாந்து இராச்சியம், இங்கிலாந்து இராச்சியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பெரிய பிரித்தானியத் தீவு, மற்றும் அயர்லாந்து நீங்கலான பிற அருகிலிருந்த தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரே இராச்சியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அயர்லாந்து பிரித்தானிய ஆட்சியின் கீழ் தனியாகவே இருந்தது. புதிய இராச்சியத்தை வெசுட்மின்சிட்டர் அடிப்படையிலான நாடாளுமன்றமும், அரசும் கட்டுப்படுத்திவந்தன. இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய இராச்சியங்கள், 1603 ஆம் ஆண்டில், அரசி முதலாம் எலிசபெத் இறந்தபின்னர், இசுக்காட்லாந்தின் அரசர் ஆறாம் சேம்சு இங்கிலாந்தின் அரசரானதிலிருந்து இரு இராச்சியங்களுக்கும் ஒரே அரசர்களே இருந்தனர்.
பெரிய பிரித்தானிய இராச்சியம்1 | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1707–1801 | |||||||||||
குறிக்கோள்: Dieu et mon droit (தமிழ்: "கடவுளும் எனது உரிமையும்")2 | |||||||||||
நாட்டுப்பண்: கடவுள் அரசியை/அரசனைக் காப்பாற்றட்டும் | |||||||||||
நிலை | நாடுகளின் ஒன்றியம் | ||||||||||
தலைநகரம் | இலண்டன் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம் (எல்லா இடங்களும்) கோர்னியம் (கோர்ன்வால்) இசுக்காட் (இசுக்காட்லாந்து) இசுக்காட்டிய கேலியம் (இசுக்காட்லாந்து) வெல்சு (வேல்சு) | ||||||||||
அரசாங்கம் | அரசமைப்புச்சட்ட முடியாட்சி | ||||||||||
அரசன்/அரசி | |||||||||||
• 1707–14 | ஆன் | ||||||||||
• 1714–27 | சார்ச் I | ||||||||||
• 1727–60 | சார்ச் II | ||||||||||
• 1760–1801 | சார்ச் III | ||||||||||
பிரதம அமைச்சர் | |||||||||||
• 1721–42 | ராபர்ட் வால்பால் | ||||||||||
• 1783–1801 | இளைய வில்லியம் பிட் | ||||||||||
சட்டமன்றம் | நாடாளுமன்றம் | ||||||||||
• மேலவை | பிரபுக்கள் சபை | ||||||||||
• கீழவை | பொதுமக்கள் சபை | ||||||||||
வரலாற்று சகாப்தம் | 18ம் நூற்றாண்டு | ||||||||||
1 மே 1707 | |||||||||||
• 1801 ஒன்றியம் | 1 சனவரி 1801 | ||||||||||
பரப்பு | |||||||||||
1801 | 230,977 km2 (89,181 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1801 | 16345646 | ||||||||||
நாணயம் | பவுண்ட் இசுட்டேர்லிங் | ||||||||||
| |||||||||||
1சுகாத்து: Kinrick o Great Breetain, வேல்சு: Teyrnas Prydain Fawr 2 The Royal motto used in Scotland was In My Defens God Me Defend. |
1798ன் ஐரியக் கிளர்ச்சி அடக்கப்பட்டபின் இயற்றப்பட்ட ஒன்றியச் சட்டமூலம் (1800) இன் அடிப்படையில் அயர்லாந்து இராச்சியம் மற்றும் பெரிய பிரித்தானிய இராச்சியம் இரண்டு இராச்சியங்களும் ஒன்றாக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் என்னும் பெயருக்குப் பதிலாக பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.