பெரிய பிரித்தானியா (Great Britain) என்பது வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் ஐரோப்பாக் கண்டத்தின் வட-மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். 209,331 சதுரகிமீ (80,823 சதுர மைல்) பரப்பளவுடன், இது பிரித்தானியத் தீவுகளில் மிகப்பெரியதும், மிகப்பெரிய ஐரோப்பியத் தீவும், உலகின் ஒன்பதாவது பெரிய தீவும் ஆகும்.[2][note 1] கடல்சார் காலநிலை காரணமாக, பருவங்களுக்கு இடையே குறுகிய வெப்பநிலை வேறுபாடுகளே காணப்படுகின்றன. பெரிய பிரித்தானியாவின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது 40 சதவீத பரப்பளவைக் கொண்ட அயர்லாந்து தீவு இதற்கு மேற்கே உள்ளது - இவற்றுடன் சுற்றியுள்ள 1,000 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளுடனும், பெயரிடப்பட்ட கணிசமான பாறைகளுடனும், பிரித்தானியத் தீவுகள் தீவுக்கூட்டத்தை உருவாக்குகின்றன.[4]
செயற்கைக்கோள் படம், 2012, மேற்கில் அயர்லாந்தும் தென்கிழக்கில் பிரான்சும் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வட-மேற்கு ஐரோப்பா |
ஆள்கூறுகள் | 54°N 2°W |
தீவுக்கூட்டம் | பிரித்தானியத் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
பரப்பளவு | 209,331 km2 (80,823 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 9-ஆவது |
உயர்ந்த ஏற்றம் | 1,345 m (4,413 ft) |
உயர்ந்த புள்ளி | பென் நெவிசு[1] |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 60,800,000 |
தரவரிசை | 3-ஆவது |
அடர்த்தி | 302 /km2 (782 /sq mi) |
மொழிகள் | |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
• Summer (பசேநே) |
|
9,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐரோப்பாவின் முதன்மை நிலப்பரப்புடன் இப்போது டோகர்லாந்து என அழைக்கப்படும் ஒரு தரைப்பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்த பெரிய பிரித்தானியாவில்,[5] சுமார் 30,000 ஆண்டுகளாக மனிதர்கள் வசித்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டில், இது சுமார் 61 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தது, இது இந்தோனேசியாவில் சாவகம், மற்றும் சப்பானில் உள்ள ஒன்சூ தீவுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட தீவாகும்.[6][7]
"பெரிய பிரித்தானியா" என்ற சொல் இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, வேல்சு ஆகியவற்றின் அரசியல் எல்லைகளைக் கொண்ட பிரதேசத்தையும் குறிக்கலாம், இதில் அவற்றின் கடல் தீவுகளும் அடங்கும்.[8] இந்தப் பிரதேசமும் வட அயர்லாந்தும் ஐக்கிய இராச்சியத்தை உருவாக்குகின்றன.[9] ஒற்றை பெரிய பிரித்தானிய இராச்சியம் 1707 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராச்சியம் (அந்த நேரத்தில் உவேல்சையும் இணைத்தது), இசுக்காட்லாந்து இராச்சியம் ஆகியவற்றிற்கிடையிலான ஒன்றிணைப்புச் சட்டங்களின் விளைவாக உருவானது.
குறிப்புகள்
- பெரிய பித்தானியாவின் அரசியல் வரையறை - அதாவது இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, வேல்சு ஆகியவை இணைந்து - பெரிய பிரித்தானியாவின் புவியியல் தீவின் பகுதியாக இல்லாத வைட்டுத் தீவு, ஆங்கிலேசி, செட்லாந்து போன்ற பல கடல் தீவுகளை உள்ளடக்கியது. அந்த மூன்று நாடுகளும் இணைந்து மொத்த பரப்பளவு 234,402 சதுரகிமீ (90,503 சதுர மைல்).[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.