ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
வேல்ஸ் (Wales, வெல்சிய மொழி: Cymru ⓘ) என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் கிழக்கே இங்கிலாந்தும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளன. வேல்சின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3 மில்லியன்கள் ஆகும். இங்கு ஆங்கிலமும் வெல்சிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகளாகும். நாட்டின் 20 விழுக்காட்டினர் வெல்சிய மொழி பேசுகின்றனர்.
வேல்ஸ்/காலேசம் Wales Cymru | |
---|---|
குறிக்கோள்: Cymru am byth "வேல்ஸ் என்றும்" | |
நாட்டுப்பண்: Hen Wlad Fy Nhadau "எனது தந்தையரின் நிலம்") | |
தலைநகரம் | கார்டிஃப் |
பெரிய நகர் | தலைநகர் |
தேசிய மொழிகள் | வெல்ஸ், ஆங்கிலம் |
மக்கள் | வெல்சியர் ( சிம்ரி) |
அரசாங்கம் | அரசியலமைப்பு முடியாட்சி |
• முதலமைச்சர் | ரோட்ரி மோர்கன் |
• பிரதி முதலமைச்சர் | யுவான் ஜோன்ஸ் |
• ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | கோர்டன் பிரவுன் |
• அரசுச் செயலர் | போல் மேர்பி |
• பிரித்தானிய அரசி | ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு |
இணைப்பு | |
• குருஃபுட் லெவெலின் | 1056 |
பரப்பு | |
• மொத்தம் | 20,779 km2 (8,023 sq mi) |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 3,004,6001 |
• 2001 கணக்கெடுப்பு | 2,903,085 |
• அடர்த்தி | 140/km2 (362.6/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $85.4 பில்லியன் |
• தலைவிகிதம் | $30,546 |
மமேசு (2003) | 0.939 அதியுயர் |
நாணயம் | பவுன் ஸ்டேர்லிங் (GBP) |
நேர வலயம் | ஒ.அ.நே0 (GMT) |
ஒ.அ.நே+1 (BST) | |
அழைப்புக்குறி | 44 |
இணையக் குறி | .uk2 |
|
ஆறு செல்ட்டிக் நாடுகளில் ஒன்றாக வேல்ஸ் விளங்குகிறது. வெல்சிய மக்களின் தனித்துவம் 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியாவில் இருந்து ரோமர்கள் விலகியதில் இருந்து ஆரம்பிக்கிறது[1]. 13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட்டுடனான போரில் லெவெலினின் படைகளின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயர்கள் வேல்சை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1635-1542ம் ஆண்டுகளில் இது ஆங்கிலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.