ரணசிங்க பிரேமதாசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
From Wikipedia, the free encyclopedia
சிறீ லங்காபிமான்ய ரணசிங்க பிரேமதாசா (Ranasinghe Premadasa; சிங்களம்: රණසිංහ ප්රේමදාස; 23 சூன் 1924 – 1 மே 1993)[1] இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 1989 சனவரி 2 முதல் 1993 மே 1 வரை இலங்கையின் 3-வது (நிறைவேற்றதிகாரத்துடன் 2-வது) அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[2] முன்னதாக இவர் 1978 முதல் 1989 வரை ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.[3] 1986 இல் இவருக்கு சிறீ லங்காபிமான்ய என்ற இலங்கையின் அதியுயர் பட்டம் அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா வழங்கிக் கௌரவித்தார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இப்பட்டம் வழங்கப்பட்டது.[4] பிரேமதாசா 1993 மே 1 அன்று கொழும்பு நகரில் நடைபெற்ற மே நாள் பேரணி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார்.[5][6] இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ரணசிங்க பிரேமதாசா Ranasinghe Premadasa | |
---|---|
3-ஆவது இலங்கை அரசுத்தலைவர் | |
பதவியில் 2 சனவரி 1989 – 1 மே 1993 | |
பிரதமர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
முன்னையவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா |
பின்னவர் | டி. பி. விஜயதுங்கா |
8-ஆவது இலங்கைப் பிரதமர் | |
பதவியில் 6 பெப்ரவரி 1978 – 2 சனவரி 1989 | |
குடியரசுத் தலைவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா |
முன்னையவர் | ஜே. ஆர். ஜெயவர்த்னா |
பின்னவர் | டி. பி. விஜயதுங்கா |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மத்தி | |
பதவியில் 22 மார்ச் 1965 – 2 சனவரி 1989 | |
முன்னையவர் | ராசிக் பரீத் |
பின்னவர் | தொகுதி நீக்கப்பட்டது |
பதவியில் 19 மார்ச் 1960 – 20 சூலை 1960 | |
முன்னையவர் | எம். எசு. தெமிசு |
பின்னவர் | ராசிக் பரீத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொழும்பு, இலங்கை | 23 சூன் 1924
இறப்பு | 1 மே 1993 68) கொழும்பு, இலங்கை | (அகவை
Manner of death | படுகொலை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | ஏமா பிரேமதாசா |
பிள்ளைகள் | சஜித், துலாஞ்சலி |
வாழிடம் | சுச்சரித்தா |
முன்னாள் கல்லூரி | புனித யோசப் கல்லூரி, கொழும்பு |
கையெழுத்து | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.