From Wikipedia, the free encyclopedia
சேர் ராசிக் பரீத் (Sir Razik Fareed, 29 டிசம்பர் 1893 - 23 ஆகத்து 1984), இலங்கை அரசியல்வாதியும், நிலவுடைமையாளரும் ஆவார். இவர் இலங்கையின் வணிகத்துறை அமைச்சராகவும், துணை சபாநாயகராகவும், பாக்கித்தானுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியவர்.[1]
சேர் ராசிக் பரீத் Sir Razik Fareed | |
---|---|
வர்த்தக அமைச்சர் | |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மத்தி | |
பதவியில் 20 சூலை 1960 – 22 மார்ச் 1965 | |
பதவியில் 30 மே 1952 – 19 மார்ச் 1960 | |
பாக்கித்தானுக்கான இலங்கைத் தூதுவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 டிசம்பர் 1893 கொழும்பு |
இறப்பு | 23 ஆகத்து 1984 90) கொழும்பு | (அகவை
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
முன்னாள் மாணவர் | கொழும்பு றோயல் கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | நிலச்சுவான்தார் |
சமயம் | இசுலாம் |
Military service | |
பற்றிணைப்பு | இலங்கை |
கிளை/சேவை | இலங்கைப் பாதுகாப்புப் படை |
சேவை ஆண்டுகள் | (1915-1918) |
தரம் | லெப்டினண்ட் |
அலகு | கொழும்பு நகரக் காவல் |
போர்கள்/யுத்தங்கள் | முதல் உலகப் போர் |
ராசிக் பரீத் வாப்சி மரிக்கார் அப்துல் ரகுமான் (1868–1933) என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற ராசிக் பரீத், 1915 ஆம் ஆண்டில் இலங்கைப் பாதுகாப்புப் படையில் கோப்ரலாகப் பணியில் சேர்ந்தார். 1915 இல் இடம்பெற்ற இனக்கலவரக் காலத்தில் இராணுவ சேவையில் இருந்த இவர் 1916 இல் லெப்டினண்டாகப் பதவி உயர்வு பெற்றார்.[2] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பாதுகாப்புக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இணைந்த பரீத் 1930 ஆம் ஆண்டு முதல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக 15 ஆண்டுகள் வரை இருந்தார். அதன் பின்னர் இலங்கை அரசாங்க சபையிலும், 1948 விடுதலைக்குப் பின்னர் மூதவை உறுப்பினராகவும் இருந்தார்.
1952, 2வது நாடாளுமன்றத் தேர்தலில் இவர் கொழும்பு மத்தி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3] 1956 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[5] பின்னர் 1960 சூலை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.[6]
1968 இல் பாக்கித்தானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
சேர் ராசிக் பரீத் கொழும்பு, பம்பலப்பிட்டியில் தனக்குச் சொந்தமான காணியில் முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார்.[1] அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவராகவும், முஸ்லிம் கவுன்சிலின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.