From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசாங்க சபை அல்லது இலங்கை அரசு சபை (State Council of Ceylon) என்பது அன்றைய பிரித்தானிய இலங்கையின் (இன்றைய இலங்கை) சட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பின் படி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குப் பதிலாக இந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது
State Council of Ceylon இலங்கை அரசாங்க சபை | |
---|---|
வகை | |
வகை | ஒருமன்ற முறைமை |
காலக்கோடு | |
குடியேற்ற நாடு | பிரித்தானிய இலங்கை |
தோற்றம் | 1931 |
முன்னிருந்த அமைப்பு | இலங்கை சட்டவாக்கப் பேரவை |
பின்வந்த அமைப்பு | இலங்கை நாடாளுமன்றம், 1947-1972 |
கலைப்பு | 1947 |
தலைமையும் அமைப்பும் | |
உறுப்பினர்கள் | 58 |
தேர்தல் | |
இறுதித் தேர்தல் | இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936 |
தலைமையகம் | |
கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை அரசாங்க சபைக் கட்டடம். இக்கட்டடம் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது. |
முதலாவது அரசு சபைக்கான தேர்தல் 1931 ஆம் ஆண்டிலும், இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. 1941 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த தேர்தல் இரண்டாம் உலகப் போர்ச் சூழ்நிலையால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அரசு சபை இலங்கை நாடாளுமன்றமாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1948, பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைந்தது.
மொத்தம் 61 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். 8 உறுப்பினர்கள் ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர். ஏனைய மூவரும் உத்தியோக உறுப்பினர்கள். இந்த 61 பேரில் இருந்து 10 பேர் அமைச்சரவைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் மூவரும் ஏழு பேர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களும் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர்.
Seamless Wikipedia browsing. On steroids.