Remove ads
From Wikipedia, the free encyclopedia
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, Alexandrina Victoria, மே 24, 1819 – சனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் நாள் முதலும், பிரித்தானிய இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக் காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.
விக்டோரியா | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் அரசியும், இந்தியாவின் பேரரசியும் (more...) | |
ஆட்சி | 20 சூன் 1837 – 22 சனவரி 1901 (63 ஆண்டுகள், 216 நாட்கள்) |
முடிசூடல் | 28 சூன் 1838 |
முன்னிருந்தவர் | வில்லியம் IV |
பின்வந்தவர் | எட்வார்ட் VII |
உடனுறை துணை | ஆல்பர்ட் (சாக்சே-கோபர்க்-கோத்தா) |
பிள்ளைகள் | |
விக்டோரியா, ஜேர்மன் பேரரசி எட்வார்ட் VII அலிஸ், ஹேசேயின் கிராண்ட் டியூச்சஸ் ஆல்பிரட், டியூக், சாக்சே-கோபர்க்-கோத்தா ஹெலனா, இளவரசி கிறிஸ்டியன் ஷெல்ஸ்விக்-ஹொல்ஸ்டீன் Louise, Duchess of Argyll Arthur, Duke of Connaught லியோபோல்ட், டியூக் அல்பனி Beatrice, Princess Henry of Battenberg | |
முழுப்பெயர் | |
Alexandrina Victoria | |
பட்டங்கள் | |
HM The Queen HRH Princess Alexandrina Victoria of Kent | |
வேந்திய மரபு | House of Hanover |
வேந்தியப் பண் | பிரித்தானிய நாட்டுப்பண் |
தந்தை | Edward Augustus, Duke of Kent |
தாய் | விக்டோரியா (சக்சே-கோபர்க்-சால்பெல்ட்) |
பிறப்பு | கென்சிங்டன் மாளிகை, இலண்டன் | 24 மே 1819
திருமுழுக்கு | 24 சூன் 1819 கென்சிங்கன் மாளிகை, இலண்டன் |
இறப்பு | 22 சனவரி 1901 81) ஆஸ்போர்ன் மாளிகை, வைட்டுத் தீவு, ஐக்கிய இராச்சியம் | (அகவை
அடக்கம் | 4 பெப்ரவரி 1901 புரொக்மோர், விண்ட்சர், பேர்க்ஷயர், ஐக்கிய இராச்சியம் |
விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.[1]
இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.
விக்டோரியா மாகாராணியின் ஆட்சி காலத்தில் பிரித்தானியாவில் பிரதமராக பணிபுரிந்தவர்கள் பதினோரு நபர்கள் ஆவர்.அவர்களின் ஆட்சிக்கால்மும் வருடமும்,
வருடம் | பிரதமர் |
---|---|
1835 | விஸ்கவுன்ட் மெல்பர்ன் |
1841 | சர் ராபர் பீல் |
1846 | லார்ட் ஜான் ரூசெல் |
1852 | ஏர்ல் ஆஃப் தெர்பாய் |
1852 | அபர்டீன் |
1855 | விஸ்கவுன்ட் பால்மெர்ஸ்டன் |
1858 | ஏர்ல் ஆஃப் தெர்பாய் |
1859 | விஸ்கவுன்ட் பால்மெர்ஸ்டன் |
1865 | ஏர்ல் ரஸ்ஸெல் |
1866 | ஏர்ல் ஆஃப் தெர்பாய் |
1868 | பெஞ்சமின் திஸ்ராலி |
1868 | வில்லியம் க்ளாடு ஸ்டோன் |
1874 | பெஞ்சமின் திஸ்ராலி |
1880 | வில்லியம் க்ளாடு ஸ்டோன் |
1885 | மார்கஸ் சேலிஸ்பரி |
1886 | வில்லியம் க்ளாடு ஸ்டோன் |
1886 | மார்கஸ் சேலிஸ்பரி |
1892 | வில்லியம் க்ளாடு ஸ்டோன் |
1894 | ஏர்ல் ஆஃப் ரோஸ்பெரி |
1895 | மார்கஸ் சேலிஸ்பரி |
63 ஆண்டுகள், ஏழு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலனிகளையும் ஆண்டார். உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.
விக்டோரியா மகாராணி 22 சனவரி 1901 அன்று தனது 81 ஆவது அகவையில் ஓஸ்பர்ன் இல்லத்தில் இறந்து[2] பிப்ரவரி 4, 1901 அன்று அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.