இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
அசித்து குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அசித்து குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அசித்து குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.[2] 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.[3] மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.[4]
அசித்து குமார் | |
---|---|
இயற் பெயர் | அசித்து குமார் |
பிறப்பு | மே 1, 1971 செகந்திராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலுங்கானா) |
பட்டப்பெயர்(கள்) | AK அல்டிமேட் ஸ்டார் |
நடிப்புக் காலம் | 1992 - தற்போது |
துணைவர் | சாலினி |
பிள்ளைகள் | அனுஷ்கா ஆத்விக்[1] |
பெற்றோர் | பி. சுப்பிரமணியம் (தந்தை) மோகினி (தாயார்) |
குறிப்பிடத்தக்க படங்கள் | காதல் கோட்டை வாலி வரலாறு பில்லா மங்காத்தா |
அஜித் குமார், இந்தியாவின் செகந்திராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[5] இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.[6]
தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.[7] 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னை தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.[8]
நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்த ஜனா திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் சரண் இயக்கத்தில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மட்டுமே.[9] இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது.[10][11] ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.
2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அசல் திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது.[12] இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.[13]
2017 ஆவது ஆண்டில் சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்ததாக சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிவா இயக்கத்தில் விசுவாசம் எனும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அஜித் குமார், சிவா கூட்டணியின் நான்காவது திரைப்படமாகும்.
பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.
பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.[14]
பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.[15]
ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.[16]
பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
இன்னும் வெளியாகாத திரைப்படங்கள் |
எண் | ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்புகள் | சான்று |
---|---|---|---|---|---|---|
1 | 1990 | என் வீடு என் கணவர் | செண்பகராமன் | பள்ளி மாணவராக சிறு வேடம் | [17] | |
2 | 1993 | பிரேம புத்தகம் | சித்தார்த் | கோலபுடி மாருதி ராவ் | தெலுங்குத் திரைப்படம் | [18] |
3 | 1993 | அமராவதி | அர்ஜுன் | செல்வா | [19] | |
4 | 1994 | பாசமலர்கள் | குமார் | சுரேஷ் சந்திர மேனன் | [18] | |
5 | 1994 | பவித்ரா | அசோக் | கே. சுபாஷ் | [20] | |
6 | 1995 | ராஜாவின் பார்வையிலே | சந்துரு | ஜானகி சௌந்தர் | விஜயுடன் நடித்த ஒரே படம் | [18] |
7 | 1995 | ஆசை | ஜீவானந்தம் | வசந்த் | [18] | |
8 | 1996 | வான்மதி | கிருஷ்ணா | அகத்தியன் | [21] | |
9 | 1996 | கல்லூரி வாசல் | வசந்த் | பவித்ரன் | [22] | |
10 | 1996 | மைனர் மாப்பிள்ளை | இராமு | வி. சி. குகநாதன் | [18] | |
11 | 1996 | காதல் கோட்டை | சூர்யா | அகத்தியன் | [18] | |
12 | 1997 | நேசம் | இரங்கநாதன் | கே. சுபாஷ் | [23] | |
13 | 1997 | ராசி | குமார் | முரளி அப்பாஸ் | [18] [24] | |
14 | 1997 | உல்லாசம் | குரு | ஜே. டி. ஜெரி | [18] | |
15 | 1997 | பகைவன் | பிரபு | ரமேஷ் பாலகிருஷ்ணன் | [18] | |
16 | 1997 | ரெட்டை ஜடை வயசு | விசய் | சி. சிவகுமார் | [18] [25] | |
17 | 1998 | காதல் மன்னன் | சிவா | சரண் | [18] [26] | |
18 | 1998 | அவள் வருவாளா | ஜீவா | ராஜ் கபூர் | [18] [27] | |
19 | 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | சஞ்சய் | விக்ரமன் | நட்புக்காக | [18] |
20 | 1998 | உயிரோடு உயிராக | அசய் | சுஷ்மா அகுசா | [28] | |
21 | 1999 | தொடரும் | ஜெயராம் | ரமேஷ் கண்ணா | [29] | |
22 | 1999 | உன்னை தேடி | ரகு | சுந்தர் சி. | [18] | |
23 | 1999 | வாலி | தேவா, சிவா | எஸ். ஜே. சூர்யா | வெற்றி – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [30] [31] |
24 | 1999 | ஆனந்த பூங்காற்றே | ஜீவா | ராஜ் கபூர் | [18] [32] | |
25 | 1999 | அமர்க்களம் | வாசு | சரண் | [18] [33] | |
26 | 1999 | நீ வருவாய் என | சுப்பிரமணி | இராசகுமாரன் | சிறப்புத் தோற்றம் | [18] [34] |
27 | 2000 | முகவரி | சிறீதர் | வி. இசட். துரை | [35] | |
28 | 2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | மனோகர் | ராஜீவ் மேனன் | [36] | |
29 | 2000 | உன்னை கொடு என்னை தருவேன் | சூர்யா | கவி காளிதாஸ் | [37] | |
30 | 2001 | தீனா | தீனதயாளன் | ஏ. ஆர். முருகதாஸ் | [38] | |
31 | 2001 | சிட்டிசன் | சிட்டிசன், சுப்பிரமணி | சரவண சுப்பையா | [39] | |
32 | 2001 | பூவெல்லாம் உன் வாசம் | சின்னா | எழில் | பரிந்துரை— சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [40] [41] |
33 | 2001 | அசோகா | சுசிமா | சந்தோஷ் சிவன் | இந்தித் திரைப்படம் | [42] |
34 | 2002 | ரெட் | ரெட் | ராம் சத்யா என்ற பெயரில் சிங்கம்புலி இயக்கியது | [43] | |
35 | 2002 | ராஜா | இராசா | எழில் | [44] | |
36 | 2002 | வில்லன் | சிவா, விசுணு | கே. எஸ். ரவிக்குமார் | வெற்றி- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [45] [46] |
37 | 2003 | என்னை தாலாட்ட வருவாளா | சதிஷ் | கே. எஸ். ரவீந்திரன் | [47] | |
38 | 2003 | ஆஞ்சநேயா | பரமகுரு | [48] | ||
39 | 2004 | ஜனா | ஜனார்த்தனன் | சாஜி கைலாஷ் | [49] | |
40 | 2004 | அட்டகாசம் | குரு, ஜீவா | சரண் | [50] | |
41 | 2005 | ஜி | வாசு | என். லிங்குசாமி | [51] | |
42 | 2006 | பரமசிவன் | சுப்பிரமணிய சிவா (பரமசிவன்) | பி. வாசு | [52] | |
43 | 2006 | திருப்பதி | திருப்பதி | பேரரசு | [53] | |
44 | 2006 | வரலாறு | சிவசங்கர், ஜீவா, விஷ்ணு | கே. எஸ். ரவிக்குமார் | வெற்றி- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [54] [55] |
45 | 2007 | ஆழ்வார் | சிவா | செல்லா | [56] | |
46 | 2007 | கிரீடம் | சக்திவேல் இராசராசன் | ஏ. எல். விஜய் | [57] | |
47 | 2007 | பில்லா | டேவிட் பில்லா, சரவணவேலு | விஷ்ணுவர்த்தன் | பரிந்துரை— சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [58] [59] |
48 | 2008 | ஏகன் | சிவா | ராஜூ சுந்தரம் | [60] | |
49 | 2010 | அசல் | ஜீவானந்தம், சிவா | சரண் | திரைக்கதை ஆசிரியராகவும் | [61] [62] |
50 | 2011 | மங்காத்தா | விநாயக் மகாதேவன் | வெங்கட் பிரபு | பரிந்துரை— சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [63] [64] |
51 | 2012 | பில்லா 2 | டேவிட் பில்லா | சக்ரி டோலட்டி | [65] | |
52 | 2012 | இங்கிலீஷ் விங்கிலிஷ் | சாசி, சக பயணி | கௌரி சின்டே | இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் தமிழ்ப் பதிப்பில் அஜித். சிறப்புத் தோற்றம்.[66] | [67] |
53 | 2013 | ஆரம்பம் | அசோக் குமார் | விஷ்ணுவர்த்தன் | பரிந்துரை— சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [68] [69] |
54 | 2014 | வீரம் | விநாயகம் | சிவா | பரிந்துரை— சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [70] [71] |
55 | 2015 | என்னை அறிந்தால் | சத்யதேவ் | கௌதம் மேனன் | பரிந்துரை - சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | [72] [73] |
56 | 2015 | வேதாளம் | கணேஷ் (வேதாளம்) | சிவா | [74] | |
57 | 2017 | விவேகம் | அஜய் குமார் (ஏகே) | சிவா | [75] | |
58 | 2018 | விசுவாசம் | தூக்குதுரை | சிவா | ||
59 | 2019 | நேர்கொண்ட பார்வை | பரத் சுப்ரமணியம் | வினோத் | ||
60 | 2020 | வலிமை | அர்ஜுன் குமார் | வினோத் |
அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும்.
எண் | ஆண்டு | விளம்பரம் | பாத்திரம் | தயாரிப்பு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | மியாமி குசன்[76] | - | |||
2 | 2005 | நெஸ்லே சன்ரைஸ் | - | ராஜீவ் மேனன் | நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்தது.[77] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.