Remove ads
விக்ரமன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (Unnidathil Ennai Koduthen) என்பது 1998 ஆம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக்கும், கதாநாயகியாக ரோஜாவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் கெளரவ தோற்றத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.[1][2] இது கார்த்திக்கின் 100வது படம்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஜி. வேணுகோபால் கே. முரளிதரன் |
கதை | விக்ரமன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | கார்த்திக் அஜித் குமார் ரோஜா ரமேஷ் கண்ணா |
ஒளிப்பதிவு | எம்.எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள் |
வெளியீடு | 15 ஆகஸ்ட் 1998 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 15 ஆகஸ்ட் 1998 இல் வெளியிடப்பட்டது. இது வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் வசூல் ரீதியாக 250 நாட்களுக்கு மேல் ஓடியது.
1996 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான கோகுலத்தில் சீதை என்ற படத்திற்கு பிறகு, லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் ஆறாவது தயாரிப்பை இயக்குநர் விக்ரமன் இயக்குவார் என்று பிப்ரவரி 1998 இல் அறிவித்தனர். இந்த படத்தில் பூவே உனக்காக படத்தில் விக்ரமுடன் பணியாற்றிய விஜய்யை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர், ஆனால் தயாரிப்பு தாமதம் காரணமாக நடிகர் கார்த்திக்கை ஒப்பந்தம் செய்தனர்.[3]
தயாரிப்பாளர்களின் ஆரம்ப தேர்வாக நடிகை மீனா இருந்தபோதிலும், ரோஜாவை நடிக்க வைக்க விக்ரமன் வற்புறுத்தியதால் அவரை மாற்றப்பட்டது.[4] இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் அவர் தனது சக நடிகரான கார்த்திக் மீதான அபிமானத்தின் காரணமாக படத்தில் விருந்தினர் பாத்திரத்தில் நடித்தார்.[5][6]
1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) கிடைத்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.