பாத்திமா பாபு (Fathima Babu) என்பவர் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும், செய்தி வாசிப்பாளரும் ஆவார். இவர் பாபு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பாத்திமா பாபு | |
---|---|
பிறப்பு | பாத்திமா 26 திசம்பர் 1963 புதுச்சேரி, இந்தியா |
பணி | நடிகை முன்னாள் செய்தி வாசிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பாபு |
பிள்ளைகள் | ஆஷிக் ஷாருக் |
தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். [1][2] மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர், தாலியா தகரமா என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடரை இயக்க திட்டமிட்டிருந்தார். [3]
இவர் முன்னாள் முதல்வர் செயலலிதா அ.தி.மு.கவின் தலைமையிடத்தில் இருந்தபோது அக்கட்சியில் இணைந்தார். இவருடன் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் இணைந்தார். இவர்களை அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013 இல் செயலலிதா நியமித்திருந்தார். [4]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.