பூவே உனக்காக (Poove Unakkaga) என்பது 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முரளி இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் விஜயின் திரைவாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படம் மற்றும் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் சுபகனக்ஷலு (1997), கன்னடத்தில் இ ஹிருதய நினகாகி (1997) மற்றும் இந்தியில் பதாய் ஹோ பதாய் (2002) என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1] மேலும் இத்திரைப்படம் இந்தியில் மன்சில் பியார் கி (2016) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2]
பூவே உனக்காக | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், மா. நா. நம்பியார் |
ஒளிப்பதிவு | எச். சரவணன் |
வெளியீடு | 15 பிப்ரவரி 1996 |
ஓட்டம் | 165 min. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.