நவம்பர் 29 (November 29) கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.
- 1803 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1853)
- 1835 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (இ. 1908)
- 1901 – சோபா சிங், இந்திய ஓவியர் (இ. 1986)
- 1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)
- 1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1988)
- 1913 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 1985)
- 1924 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக்கலைஞர் (இ. 2021)
- 1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (இ. 2019)
- 1936 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
- 1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1987)
- 1963 – லலித் மோடி, இந்தியத் தொழிலதிபர்
- 1977 – யூனுஸ் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 1982 – ரம்யா, இந்திய நடிகை, அரசியல்வாதி
- 1530 – தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470)
- 1694 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628)
- 1872 – மேரி சோமர்வில்லி, இசுக்காட்டிய-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர்.
- 1924 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1858)
- 1989 – அ. மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
- 1993 – ஜெ. ஆர். டி. டாட்டா, பிரான்சிய-இந்தியத் தொழிலதிபர் (பி. 1904)
- 2008 – ஜோர்ன் உட்சன், தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (பி. 1918)
- 2010 – எஸ். சிவநாயகம், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1930)
- 2011 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1942)
- 2011 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
- 2013 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி. 1921)
- 2023 – என்றி கிசிஞ்சர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க அரசியல்வாதி (பி. 1923)