Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008[1]), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர். நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர்.[2]
ஜர்ன் ஊட்சன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | டேனியர் |
பிறப்பு | கோப்பன்ஹேகன், டென்மார்க் | 9 ஏப்ரல் 1918
இறப்பு | 29 நவம்பர் 2008 90) ஹெல்ஸிங்கர், டென்மார்க் | (அகவை
பணி | |
கட்டிடங்கள் | ஓபெரா மண்டபம் பாக்ஸ்வெர்ட் தேவாலயம் குவைத் நாடாளுமன்றக் கட்டடம் |
விருதுகள் | பிரிட்ஸ்கர் பரிசு |
இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் ஒரு கப்பல் வடிவமைப்பாளருக்கு மகனாகப் பிறந்தார். டென்மார்க்கின் தொழில் நகரமான அல்போர்கில் வளர்ந்து டேனிய முடியரசின் நுண்கலைக் கல்லூரியில் பயின்றார். பின் ஸ்வீடன், அமெரிக்கா நாடுகளில் பணியாற்றி இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் கோப்பன்ஹேகனுக்கு வந்தார்.
1957ல் சீனா, யப்பான், இந்திய நாடுகளில் பயணமேற்கொண்டு வடிவமைப்பில் இணக்கம், அகம் புறங்களுக்கிடையேயான தொடர்பு முதலியனவற்றைக் கற்றார்.
1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபெரா மண்டபத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பங்கேற்று முதற்பரிசு வென்றார். இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.
இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார். ஆனால், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட, நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம், ஊட்சனுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியது. 1966ல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார். எனினும் ஓபெரா மண்டபம், 1973ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளச் சின்னமான இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.
இவருடைய மற்ற கட்டிடப்படைப்புகளில் சில
ஓபெரா மண்டபத்தை வடிவமைத்ததற்காக, சிட்னி பல்கலைக்கழகம் ஊட்சனுக்கு மார்ச் 2003ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக ஊட்சன் ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் ஊட்சனின் சார்பில் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.