நியூ சவுத் வேல்சு

ஆசுத்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலம் From Wikipedia, the free encyclopedia

நியூ சவுத் வேல்சுmap

நியூ சவுத் வேல்சு (New South Wales), பொதுவாக நிசவே (NSW) என்பது ஆத்திரேலியாவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஓர் ஆத்திரேலிய மாநிலம் ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே குயின்சுலாந்து, தெற்கே விக்டோரியா, மேற்கே தெற்கு ஆத்திரேலியா ஆகிய மாநிலங்கள் உள்ளனர். இதன் கரைகள் கிழக்கே பவளக் கடல், தாஸ்மான் கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளன. ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம், ஜேர்விஸ் குடா பிரதேசம் என்பன இம்மாநிலத்திற்குள் உள்ள பகுதிகளாகும். நியூ சவுத் வேல்சு மாநிலத் தலைநகரம் சிட்னி, இது ஆத்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.[7] திசம்பர் 2023 இல், நியூ சவுத் வேல்சின் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது,[2] இது ஆத்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக மாறியது. மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, 5.3 மில்லியன், சிட்னி பெருநிலப் பகுதியில் வாழ்கின்றனர்.[7]

விரைவான உண்மைகள் நியூ சவுத் வேல்சுNew South Wales, நாடு ...
நியூ சவுத் வேல்சு
New South Wales
Thumb
கொடி
Thumb
சின்னம்
அடைபெயர்(கள்): 
  • முதல் மாநிலம்
  • முதன்மை மாநிலம்
குறிக்கோள்: 
Orta Recens Quam Pura Nites (இலத்தீன்)
(Newly Risen, How Brightly You Shine,
புதிதாக எழுந்தாய், எவ்வளவு பிரகாசமாக பிரகாசிக்கிறாய்)
QLD
NSW
ACT
WA
NT
SA
VIC
TAS
Thumb
ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°S 147°E
நாடுஆத்திரேலியா
கூட்டமைப்புக்கு முன்நியூ சவுத் வேல்சு குடியேற்றம்
அமைப்பு26 சனவரி 1788
பொறுப்புள்ள அரசு6 சூன் 1856
கூட்டமைப்பு1 சனவரி 1901
தலைநகர்சிட்னி
33°52′04″S 151°12′36″E
நிர்வாகம்128 உள்ளாட்சிப் பகுதிகள்
பெரிய நகரம்தலைநகர்
இடப்பெயரர்நியூசவுத்வேல்சியர்
அரசு
 மன்னர்
சார்லசு III
 ஆளுநர்
மார்கரெட் பீசுலி
 முதலமைச்சர்
கிறிசு மின்சு (தொழிற்கட்சி)
சட்டமன்றம்நியூ சவுத் வேல்சு நாடாளுமன்றம்
சட்டமன்றம்
சட்டப்பேரவை
நீதித்துறைநிசவே மீஉயர் நீதிமன்றம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
12 மேலவையினர் (76 இல்)
47 இருக்கைகள் (151 இல்)
பரப்பளவு
 நிலம்
801,150[1] km2 (309,330 sq mi)
உயர் ஏற்றம்2,228 m (7,310 ft)
மக்கள்தொகை
 மதிப்பு
8,414,000[2] (1st)
 அடர்த்தி
10.15/km2 (26.3/sq mi) (3-ஆவது)
மொத்த மாநில உற்பத்தி2020 மதிப்பு
 மொத்தம்
AU$624.9 பில்.[3] (1-ஆவது)
 தலைக்கு
AU$76,876 (4-ஆவது)
ம.மே.சு (2022) 0.946[4]
very high · 3-ஆவது
நேர வலயம்
  கோடை (பசேநே)
அஞ்சல் குறியீடு
NSW
ISO 3166 குறியீடுAU-NSW
சின்னங்கள்
பறவைகூக்கபரா
(Dacelo gigas)
மீன்நீல குரொப்பர்
(Achoerodus viridis)
மலர்வராட்டா
(Telopea speciosissima)[5]
நிறம்மேக நீலம்
(Pantone 291)[6]
இணையதளம்nsw.gov.au
மூடு

நியூ சவுத் வேல்சு குடியேற்றம் 1788 இல் ஒரு பிரித்தானியத் தண்டனைக் குடியேற்ற நாடாக நிறுவப்பட்டது. இது முதலில் ஆத்திரேலிய நிலப்பரப்பில் அரைவாசிக்கும் மேற்பட்டவற்றை உள்ளடக்கியது, அதன் மேற்கு எல்லை 1825 இல் 129வது மெரிடியன் கிழக்கில் அமைக்கப்பட்டது. பின்னர் இக்குடியேற்ற நாட்டில் வான் டீமனின் நிலம், லோர்ட் ஹாவ் தீவு, நோர்போக் தீவு ஆகிய தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டில், இக்குடியேற்ற நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தனித்தனி பிரித்தானிய குடியேற்றங்களாக உருவாக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டன, அவை இறுதியில் ஆத்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களாகவும் ஆள்புலங்களாகவும் மாறின. சுவான் ஆற்றுக் குடியேற்றம் (பின்னர் மேற்கு ஆத்திரேலியாவின் குடியேற்ற என்று அழைக்கப்பட்டது) ஒருபோதும் நியூ சவுத் வேல்சின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்படவில்லை.

லோர்ட் ஹாவ் தீவு நியூ சவுத் வேல்சின் ஒரு பகுதியாகவே உள்ளது, அதே நேரத்தில் நோர்போக் தீவு ஒரு கூட்டாட்சிப் பகுதியாக மாறியது, அதே போன்றே இப்போது ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம், ஜேர்விஸ் குடா பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதிகளும் உள்ளன.

வரலாறு

தொல்குடி ஆத்திரேலியர்கள்

நியூ சவுத் வேல்சின் தொடக்ககால மக்கள் ஏறத்தாழ 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திரேலியாவிற்கு வந்த தொல்குடிகள் ஆவர். ஐரோப்பியப் குடியேற்றத்திற்கு முன்பு இப்பகுதியில் 250,000 தொல்குடி மக்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[8] தாரவால் மொழியின் ஒரு மாறுபாட்டைப் பேசிய வோடி வோடி மக்கள், சிட்னியின் தெற்கே உள்ள (இன்றைய கேம்பெல்டவுன், சோல்கேவன் ஆறு, மொசு வேல், இலவாரா ஆகிய பகுதிகளால் சூழப்பட்ட) பகுதியின் தொடக்ககால காப்பாளர்கள் ஆவர்.[9]

தற்போதைய நியூ சவுத் வேல்சில் உள்ள பகுதிக்குள் பாரம்பரிய நிலங்களைக் கொண்ட பிற பழங்குடி மக்களும் உள்ளனர், இதில் விரட்சூரி, கமிலரே, யூயின், ஙரிகோ, குவீகல், ஙியாம்பா மக்கள் அடங்குவர்.

1788—பிரித்தானியக் குடியேற்றம்

Thumb
1788 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவில் ஜாக்சன் துறை குடியேற்றத்தை நிறுவுதல்

1770 இல், ஜேம்ஸ் குக் புதிய ஒல்லாந்து கண்டத்தின், தற்போதைய ஆத்திரேலியாவின், வரைபடமாக்கப்படாத கிழக்குக் கடற்கரையை வரைபடமாக்கினார், அத்துடன் அவர் அக்காலகட்டத்தில் ஆராய்ந்த முழுக் கடற்கரைப் பகுதியையும் பிரித்தானியப் பிரதேசமாக உரிமை கோரினார். குக் தொல்குடி மக்களின் சம்மதத்தைப் பெறவில்லை.[10][11] குக் முதலில் அந்த நிலத்திற்கு நியூ வேல்சு என்று பெயரிட்டார், ஆனால் பிரித்தானியாவுக்குத் திரும்பும் பயணத்தில் அவர் அதற்கு "நியூ சவுத் வேல்சு" என்ற பெயரிற்கு மாற்றினார்.[12][a]

1788 சனவரியில் ஆர்தர் பிலிப் 11 கப்பல்களில் 736 குற்றவாளிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியேறிகளுடன் பொட்டனி விரிகுடாவில் தரையிறங்கினார்.[15] அங்கிருந்து அவர் ஜாக்சன் துறை என்ற பகுதிக்குச் சென்று, தனது முதலாவது குடியேற்றத்தை 1788 sanavari 26 anRu தொடங்கினார். அவ்விடத்திற்கு அவர் இட்டபெயர் சிட்னி சிறுகுடா (Sydney Cove) என்பதாகும்.[16] இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆத்திரேலியத் தேசிய நாள் ஆனது. ஆளுநர் பிலிப் 1788 பிப்ரவரி 7 அன்று சிட்னியில் பிரித்தானியக் குடியேற்றத்தை முறையாக அறிவித்தார். இக்குடியேற்றத்தில் ஆத்திரேலியாவின் கிழக்கேயுள்ள இன்றைய நியூ சவுத் வேல்சு, குயின்சுலாந்து, விக்டோரியா, தாசுமேனியா ஆகியன அடங்கியிருந்தன.[17] இவர் 1792 வரை ஆளுநராக இருந்தார்.[18]

தொடக்கத்தில் இந்தக் குடியேற்றம் வாழ்வாதார வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னிறைவு பெற்ற தண்டனைக் குடியேற்றத் திட்டமாக இருக்க திட்டமிடப்பட்டது. குற்றவாளிகளைத் தனிமைப்படுத்துவதற்காக வணிகம், கப்பல் கட்டுதல் போன்றவை தடைசெய்யப்பட்டன. இருப்பினும், ஆளுநர் ஆர்தர் பிலிப் வெளியேறிய பிறகு, குடியேற்றத்தின் இராணுவ அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தவும், வருகை தரும் கப்பல்களில் இருந்து பெறப்பட்ட நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்யவும் தொடங்கினர். முன்னாள் குற்றவாளிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் வேளாண்மை செய்து வணிகத்தில் ஈடுபட்டனர். சிட்னியின் இன்றைய புறநகர்களான பரமட்டா, வின்ட்சர், கேம்டன் ஆகியவற்றைச் சுற்றியுள்ள வளமான நிலங்களில் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. 1803-இல் நியூ சவுத் வேல்சு குடியேற்றம் தானியங்களில் தன்னிறைவு பெற்றது. பயணத்தை எளிதாக்கவும் கடலோரக் குடியிருப்புகளின் கடல் வளங்களைச் சுரண்டவும் படகுக் கட்டுமானம் உருவாக்கப்பட்டது.[19]

குறிப்புகள்

  1. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான ஒரே குறிப்பிடத்தக்க முயற்சி 1887 ஆம் ஆண்டு நிகழ்ந்தது, அப்போதைய பிரதமர் ஹென்றி பார்க்கசு குடியேற்ற நாட்டின் பெயரை "ஆத்திரேலியா" என்று மாற்றுவதற்கான சட்டமூலம் அதன் முதல் வாசிப்பை எட்டியது.[13] கூட்டமைப்புக்கு முன்னதாக ஏனைய குடியேற்றங்கள் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை.[14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.