From Wikipedia, the free encyclopedia
லோர்ட் ஹாவ் தீவு (Lord Howe Island, (ஒலிப்பு: /ˈhaʊ/) என்பது ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 600 கிமீ (370 மைல்) கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. லோர்ட் ஹாவ் தீவுகளின் கூட்டத்தில் 20 கிமீ தென்கிழக்கே உள்ள போல் பிரமிட் உம் அடங்கும்[6]. இத்தீவுக் கூட்டம் லோர்ட் ஹாவ் தீவுச் சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வமைப்பானது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 175 உள்ளக அமைப்புகளில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகளுள் அடங்காது. எனவே இது "இணைக்கப்படாத பகுதி" (unincorporated area) என அழைக்கப்படுகிறது. இத்தீவுச் சபையினால் தன்னாட்சி முறையில் ஆளப்படுகிறது[1]. லோர்ட் ஹாவ் தீவு அதன் தனித்தன்மையான அழகிற்காகவும், இங்குள்ள பல்லின உயிரினங்களுக்காகவும், இத்தீவு உலகப் பாரம்பரியக் களமாக 1982 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது[7].
அதிகாரபூர்வமற்ற ஆனால் பெரும்பாலும் பறக்கவிடப்படும் லோர்ட் ஹாவ் தீவுக் கொடி | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | லோர்ட் ஹாவ் தீவுக் கூட்டம் |
ஆள்கூறுகள் | 31°33′S 159°05′E |
முக்கிய தீவுகள் | லோர்ட் ஹாவ் தீவு, ஆட்மிரால்ட்டி தீவுகள், மட்டன் பறவை தீவுகள், போல் பிரமிட் |
உயர்ந்த புள்ளி | கவர் மலை |
நிர்வாகம் | |
ஆஸ்திரேலியா | |
நிர்வாகப் பிரிவு | நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இணைக்கப்படாத பகுதி லோர்ட் ஹாவ் தீவு சபையின் தன்னாட்சி[1] போர்ட் மக்குவாரி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதி[2][3] |
பெரிய குடியிருப்பு | லோர்ட் ஹாவ் தீவு (மக். 347[4]) |
மக்கள் | |
மக்கள்தொகை | 347 நிரந்தர வதிவுரிமை உடையோர்[4]. ஒரே தடவை 400 இற்கு மேற்படாத உல்லாசப் பயணிகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர்[5] |
இத்தீவின் பொதுவான நேர வலயம் UTC+10:30. கோடை நேர பகலொளி சேமிப்புக் காலத்தில் அரை மணி நேரம் முன் தள்ளப்படும் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+11)[8].
லோர்ட் ஹாவ் தீவு 1788, பெப்ரவரி 17 ஆம் நாள் லெப். ஹென்றி லிட்ஜ்பேர்ட் போல் என்பவர் தலைமையிலான "எச்எம்எஸ் சப்ளை" என்ற கப்பல் மாலுமிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அந்நேரம் பொட்டனி விரிகுடாவில் இருந்து நோர்போக் தீவுக்கு குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு அங்கு குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிக்கச் செல்லும் வழியில் இத்தீவைக் கண்டுபிடித்தார். திரும்பி வரும் வழியில் 1788 மார்ச் 13 ஆம் நாளில் தனது சிறு குழுவொன்றை அத்தீவுக்கு அனுப்பினார். மனிதவாழ்வற்ற தீவாக அது அப்போது இருந்தது. அத்துடன் தெற்கு பசிபிக்கின் பொலினீசிய மக்கள் எவரினதும் காலடி பட்டிருக்கவில்லை. இப்பகுதியில் உள்ள லிட்ஜ்பேர்ட் மலை, போல் பிரமிட் ஆகியன இவரது நினைவுப் பெயர்களாகும். இத்தீவின் பெயர் முடியரசின் முதலாவது பிரதிநிதி (1st Earl) ரிச்சார்ட் ஹாவ் என்பாரின் நினைவாகச் சூட்டப்பட்டது[9].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.