From Wikipedia, the free encyclopedia
திலீபன் (Thileepan) எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (29 நவம்பர் 1963 – 26 செப்டம்பர் 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால மற்றும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர், தமிழீழம், யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப் போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயத்திலும், உறுதியுடன் அந்த உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.[1][2][3][4][5] இவரை இந்திய அரசு இறக்க விட்டது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை இவருக்கு வழங்கப்பட்டது.
Lt. Colonel திலீபன் | |
---|---|
பிறப்பு | இராசையா பார்த்திபன் 29 நவம்பர் 1963 ஊரெழு, யாழ்ப்பாணம், தமிழீழம் |
இறப்பு | 26 செப்டம்பர் 1987 23) நல்லூர், யாழ்ப்பாணம், தமிழீழம் | (அகவை
மற்ற பெயர்கள் | அமிர்தலிங்கம் திலீபன் |
இனம் | ஈழத் தமிழர் |
செயற்பாட்டுக் காலம் | 1983–1987 |
அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.
திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு.[மேற்கோள் தேவை] அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலீபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலீபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், விமல் வீரவங்ச போன்ற சிங்கள அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.