From Wikipedia, the free encyclopedia
மார்செல்லோ மால்பிகி (Marcello Malpighi, 10 மார்ச் 1628 - 29 நவம்பர் 1694) இத்தாலியில் பிறந்த உயிரியலாளரும், மருத்துவரும் ஆவார். அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார். அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார். ஒப்பீட்டு உளவியலுக்கு அடித்தளமிட்டவராக கருதப்படுகிறார். பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார். இந்த நுண்குழலுக்கு மூச்சுக்குழல் எனவும் பெயரிட்டார்.[1][2][3]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மருத்துவ முனைவர் மார்செல்லோ மால்பிகி Marcello Malpighi | |
---|---|
கார்லோ சிக்னானி வரைந்த ஓவியம் | |
பிறப்பு | பொலோனா, திருத்தந்தை நாடுகள் | 10 மார்ச்சு 1628
இறப்பு | 29 நவம்பர் 1694 66) உரோம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
தேசியம் | இத்தாலியர் |
துறை | உடற்கூற்றியல் இழையவியல், உடலியங்கியல், கருவியல், செயன்முறை மருத்துவம் |
பணியிடங்கள் | பொலோனா பல்கலைக்கழகம், பீசா பல்கலைக்க்ழகம் மெசீனா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பொலோனா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | உயிரியலில் முக்கிய பங்களிப்புகள் |
தாக்கம் செலுத்தியோர் | பிரான்செசுக்கோ ரெடி |
பின்பற்றுவோர் | கேமிலோ கொல்கி |
நுரையீரல் செல்களை அறுவை செய்து பார்த்து, அதன் சிறிய, மெல்லிய சுவர் கொண்ட தந்துகிகள் இருப்பதை கண்டறிந்தார். தந்துகிகள்தான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்றும், அவை இரத்தத்தை இதயத்தை நோக்கி செலுத்துகிறது என்றும் , சுற்றோட்டத்தொகுப்பு நிகழ்த்தக்கூடிய அனைத்து வேலைகளையும் தந்துகிகளே நிகழ்த்துகின்றன என்பதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தினார். ஏராளமான உடல் உள்ளுறுப்புகள் அவருடைய பெயரைத்தாங்கி நிற்கின்றன. சுற்றோட்ட, நிணநீர் ஓட்டத்தோடு தொடர்புடைய மால்பிஜியன் துகள்கள், புறத்தோல் திசுவில் காணப்படும் மால்பிஜியன் அடுக்கு, பூச்சிகளில் காணப்படும் மால்பிஜியன் குழல்கள் இதற்கு உதாரணங்களாகும்.பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் நைட்ரஜன் அடங்கிய கழிவுப் பொருள்களான யூரிக் அமிலம் மற்றும் நீரை மலத்திலிருந்து வெளியேற்றுகின்றன என்பதை மால்பிஜி கண்டறிந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.