திசம்பர் 28 (December 28) கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளன
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV | ||||||
நிகழ்வுகள்
- கிமு 169 – இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது.
- 418 – முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 457 – மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
- 893 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது.
- 1065 – இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.
- 1308 – சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது.
- 1659 – மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன.
- 1768 – தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது.
- 1835 – ஒசியோலா தனது செமினோலே படையினருடன் புளோரிடாவில் அமெரிக்க இராணுவத்திற்கெதிரான இரண்டாம் செமினோலே போரை ஆரம்பித்தார்.
- 1836 – தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
- 1836 – மெக்சிகோவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
- 1846 – அயோவா அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
- 1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுகளுக்கு உரிமை கோரியது.
- 1879 – இசுக்காட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
- 1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.
- 1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் 30,000 ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.[1]
- 1895 – பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
- 1895 – எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.
- 1908 – இத்தாலி, சிசிலியில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் உயிரிழந்தனர்..
- 1929 – சமோவாவில் நியூசிலாந்து குடியேற்றக் காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
- 1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
- 1943 – சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.
- 1948 – அமெரிக்காவின் டிசி-3 விமானம் ஒன்று 32 பேருடன் மயாமியில் இருந்து 50 மைல்கள் தெற்கே காணாமல் போனது.
- 1956 – கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங், துங்கு அப்துல் ரகுமான் ஆகியோர் மலாயா அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மலாயா, பாலிங் நகரில் கூடினர்.
- 1958 – கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
- 1989 – அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர்.
- 1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
- 2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுப் படைகள் சோமாலியா தலைநகர் மொகதிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இசுலாமியப் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
- 2014 – இத்தாலி, ஏட்ரியாட்டிக் கடலில் நார்மன் அத்திலாந்திக் என்ற கப்பல் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காணாமல் போயினர்.
- 2014 – சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1713 – இலாகைல்லே, பிரான்சிய வானியலாளர், பாதிரியார் (இ. 1762)
- 1798 – தாமசு ஜேம்சு எண்டர்சன், இசுக்கொட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1844)
- 1856 – ஊட்ரோ வில்சன், அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1924)
- 1882 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944)
- 1903 – ஜான் வான் நியுமேன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1957)
- 1927 – எஸ். என். நாகராசன், தமிழக மார்க்சிய சிந்தனையாளர் (இ. 2021)
- 1932 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
- 1934 – மேகி ஸ்மித், ஆங்கிலேய நடிகை
- 1936 – எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (இ. 2014)
- 1937 – ரத்தன் டாடா, இந்தியத் தொழிலதிபர்
- 1940 – அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
- 1944 – சாந்திரா மூர் பேபர், அமெரிக்க வானியலாளர்
- 1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)
- 1946 – ச. கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1947 – நாஞ்சில் நாடன், தமிழக எழுத்தாளர்
- 1952 – அருண் ஜெட்லி, இந்திய அரசியல்வாதி
- 1954 – டென்செல் வாஷிங்டன், அமெரிக்க நடிகர்
- 1955 – லியூ சியாபோ, அமைதிக்கான நோபல் பரிசு நோபல் பரிசு பெற்ற சீன செயற்பாட்டாளர்
- 1964 – ஜி. கே. வாசன், தமிழக அரசியல்வாதி
- 1969 – லினசு டோர்வால்டுசு, லினக்சு கருனியை வடிவமைத்த பின்லாந்து-அமெரிகக் கணினி அறிவியலாளர்
- 1981 – சியென்னா மில்லர், பிரித்தானிய நடிகை
இறப்புகள்
- 1622 – பிரான்சிசு டி சேலசு, பிரான்சிய ஆயர், புனிதர் (பி. 1567)
- 1663 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1618)
- 1694 – இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1662)
- 1708 – யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு, பிரான்சிய உயிரியலாளர் (பி. 1656)
- 1894 – பத்தாம் சாமராச உடையார், மைசூர் அரசர் (பி. 1863)
- 1994 – கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்
- 1999 – சாரதாம்பாள், இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் (பி. 1970)
- 2003 – குஷபாவு தாக்கரே, இந்திய அரசியல்வாதி (பி. 1922)
- 2007 – அமர்நாத் சேகல், இந்திய சிற்பி, ஓவியர், கவிஞர் (பி. 1922)
- 2012 – எஸ். செல்வசேகரன், இலங்கை மேடை, வானொலி, திரைப்பட நடிகர்
- 2013 – ஆல்ட்டன் ஆர்ப், அமெரிக்க-செருமானிய வானியலாளர் (பி. 1927)
சிறப்பு நாள்
- புனித மாசில்லாதோர் திருவிழா (கத்தோலிக்க திருச்சபை, இங்கிலாந்து திருச்சபை, லூதரனியம்)
- குடியரசு நாள் (தெற்கு சூடான்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.