திசம்பர் 21 (December 21) கிரிகோரியன் ஆண்டின் 355 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 356 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன.
வடக்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் குளிர்காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். தெற்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் கோடை காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர்.
- 1118 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேய ஆயர், புனிதர் (இ. 1170)
- 1550 – மான் சிங், முகலாயப் படைத்தலைவர் (இ. 1614)
- 1804 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1881)
- 1871 – நா. கதிரைவேற்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1907)
- 1890 – ஹெர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1967)
- 1892 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1983)
- 1898 – இரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1973)
- 1920 – தெ. வ. இராசரத்தினம், இலங்கை வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 1994
- 1921 – ஆர். உமாநாத், தமிழக இடதுசாரி அரசியல்வாதி (இ. 2014)
- 1932 – உ. இரா. அனந்தமூர்த்தி, இந்தியக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2014)
- 1937 – பண்ருட்டி இராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி
- 1942 – கூ சிங்தாவ், சீனாவின் 6வது அரசுத்தலைவர்
- 1947 – பாக்கோ தே லூசீயா, இசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர் (இ. 2014)
- 1948 – ஈ. வெ. கி. ச. இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
- 1948 – சாமுவேல் எல். ஜாக்சன், அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்
- 1949 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1987)
- 1954 – கிரிசு எவர்ட், அமெரிக்க டென்னிசு வீரர்
- 1959 – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழக துடுப்பாட்ட வீரர்
- 1963 – கோவிந்தா, இந்தித் திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி
- 1967 – மிக்கைல் சாக்கஷ்விலி, ஜார்ஜியாவின் 3வது அரசுத்தலைவர்
- 1972 – ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய அரசியல்வாதி
- 1977 – இம்மானுவேல் மாக்ரோன், பிரான்சின் அரசுத்தலைவர்
- 1985 – ஆண்ட்ரியா ஜெரெமையா, இந்தியப் பின்னணிப் பாடகி, நடிகை
- 1989 – தமன்னா, இந்தியத் திரைப்பட நடிகை
- 72 – தோமா (திருத்தூதர்), உரோமைப் புனிதர் (பி. 1)
- 1597 – பீட்டர் கனிசியு, டச்சு மதகுரு, புனிதர் (பி. 1521)
- 1940 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1896)
- 1942 – பிராண்ஸ் போவாஸ், செருமானிய-அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1858)
- 1975 – கோவை அய்யாமுத்து, தமிழக எழுத்தாளர், காந்தியவாதி (பி. 1898)
- 1986 – சோமசுந்தரம் நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1904)
- 1988 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவர் (பி. 1907)
- 1998 – துரை விஸ்வநாதன், ஈழத்து பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1931)
- 2006 – வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)
- 2008 – கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்
- 2010 – ஈழத்துப் பூராடனார், ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (பி. 1928)
- 2011 – பி. கே. அய்யங்கார், இந்திய அணு அறிவியலாளர் (பி. 1931)
- 2015 – சார்வாகன், தமிழகத் தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
- 2018 – பிரபஞ்சன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1945)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72