பிரிட்டன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பெண் உரிமை ஆர்வலர் From Wikipedia, the free encyclopedia
ரெபெக்கா வெஸ்ட் (ஆங்கில மொழி: Dame Cicely Isabel Fairfield) (21 டிசம்பர் 1892 – 15 மார்ச் 1983), ஒரு பிரிட்டன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பெண் உரிமை ஆர்வலர். இவர் தி டைம்ஸ், தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள், இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார்.[1]
ரெபெக்கா வெஸ்ட் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிக்கும் ஒரு வீட்டில் 1892 இல் லண்டனில் பிறந்தார். அப்பா துணிச்சலான பத்திரிகையாளர்.[2] இசை மீதும், ஓவியத்தின் மீதும் நாட்டம் கொண்ட ஸ்காத்லாந்துநாட்டுப் பெண்ணான இசபெல்லா அவரது தாய்.[3] தனது 14 அப்பா இறந்தபோது குடும்பம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவில் குடியேறியது. அங்கு ஜியார்ஜ் வாட்சன் பெண்கள் கல்லூரியில் பயின்றார்.[4] 16 வயதில் குடும்ப வசதியின் காரணமாக கல்வி பயில்வதை நிறுத்திக் கொண்டார். ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக்கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
செப்டம்பர் 1912 'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச். ஜி. வெல்ஸ் இன் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912 இல் இந்த பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் இவரது எழுத்தால் கவரப்பட்டார். 1913 இல் இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந்த உறவு நீடித்தது.[5] அவர்களின் இந்த உறவு 1946 இல் வெல்ஸ் மறையும் வரை நீடித்தது.
பெண் உரிமை, சமூக நலனுக்கு குரல் கொடுப்பதிலும், கூர்மையான விமர்சனம் எழுதுவதிலும் புகழ்பெற்று விளங்கினார் ரெபெக்கா. தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள், இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவரது எழுத்தாற்றலை ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பாராட்டியுள்ளார்.[6]
பத்திரிகைத் துறையில் படைத்த சாதனைக்காக இவருக்கு 'வுமன்ஸ் பிரஸ் கிளப் அவார்டு' விருதை 1948 இல் அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் வழங்கினார். 'உலகின் தலைசிறந்த நிருபர்' என்று விழாவில் அதிபர் இவருக்கு புகழாரம் சூட்டினார்.[6]
ரெபெக்கா வெஸ்ட் 91 ஆவது வயதில் மறைந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.