புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 27 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலம், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும்[3].

விரைவான உண்மைகள்
புளோரிடா மாநிலம்
Thumb Thumb
புளோரிடாவின் கொடி புளோரிடா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வெயில் மாநிலம்
குறிக்கோள்(கள்): கடவுளை நம்புவோம்
Thumb
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்டலஹாசி
பெரிய நகரம்ஜாக்சன்வில்
பெரிய கூட்டு நகரம்மயாமி மாநகரம்
பரப்பளவு  22வது
 - மொத்தம்65,795[1] சதுர மைல்
(170,304[1] கிமீ²)
 - அகலம்361 மைல் (582 கிமீ)
 - நீளம்447 மைல் (721 கிமீ)
 - % நீர்17.9
 - அகலாங்கு24°27′ வ - 31° வ
 - நெட்டாங்கு80°02′ மே - 87°38′ மே
மக்கள் தொகை 4வது
 - மொத்தம் (2000)15,982,378
 - மக்களடர்த்தி309/சதுர மைல் 
117.3/கிமீ² (8வது)
 - சராசரி வருமானம் $41,171 (36வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி பிரிட்டன் மலை[2]
345 அடி  (105 மீ)
 - சராசரி உயரம்98 அடி  (30 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 3, 1845 (27வது)
ஆளுனர்சார்லி கிரிஸ்ட் (R)
செனட்டர்கள் பில் நெல்சன் (D)
மெல் மார்ட்டீனெஸ் (R)
நேரவலயம் 
 - மூவலந்தீவும்
பெரியவளைவுப் பகுதியும்
கிழக்கு
 - பாத்திரக்காம்பும்
ஏப்பலேச்சிகோலா ஆற்றின் மேற்கேயும்
நடு
சுருக்கங்கள் FL Fla. US-FL
இணையத்தளம் www.myflorida.com
மூடு

புவியியல் அமைப்பில் இந்த மாநிலம் ஒரு குடாநாடாக இருப்பதுடன், மேற்குப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும், வடக்குப் பகுதியில் அலபாமா, மற்றும் ஜோர்ஜியாவையும் ஐயும், கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் பெருங்கடலையும் கொண்டுள்ளது. குடாநாடாக இருப்பதனால், தொடர்ந்த கடற்கரைப் பகுதிகளை சுற்றிலும் கொண்டிருப்பதுடன், அடிக்கடி வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் இடமாகவும் இருக்கின்றது. புளோரிடா மாநிலத்தில் பரந்து காணப்படும் சதுப்புநில தேசியப் பூங்காவில் (Everglades National Park), மிக அரிதான விலங்குகள் பல காணப்படுகின்றன. இன அச்சுறுத்தலுக்கு உட்பட்ட பல அருகிய இனங்கள், இந்தப் தேசியப் பூங்காவில், இயற்கைச் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன[4][5]. புளோரிடாவில் அமைந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவானது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருக்கின்றது[6].

சுற்றுலாத்துறையில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் வால்ட் டிஸ்னி உலகம் இந்த புளோரிடா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒர்லாண்டோ நகரத்தில் உள்ளது. வால்ட் டிஸ்னி உலகத்திற்குச் சொந்தமான நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும் இங்கே அமைந்திருக்கின்றன.

Thumb
அதன் மேற்குக் கடற்கரை

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.