இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 (Indonesia AirAsia Flight 8501, QZ8501/AWQ8501) என்பது இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினரோடு[6] 2014 திசம்பர் 28 இல் காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் ஆகும்.[7] இரண்டு நாட்களின் பின்னர் டிச்ம்பர் 30 அன்று விமானத்தின் சிதைந்த பாகங்கள் சாவகக் கடலில் கரிமட்டா நீரிணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்தது 40 உடல்கள் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன.[8]
காணாமல்போன PK-AXC விமானம் (2011 இல் எடுக்கப்பட்டது) | |
சுருக்கம் | |
---|---|
நாள் | திசம்பர் 28, 2014 |
இடம் | கடைசித் தொடர்பு சாவகக் கடல் பகுதியில். 3.2466°S 109.3682°E[1] |
பயணிகள் | 155 |
ஊழியர் | 7 |
உயிரிழப்புகள் | 162 (அனைவரும்)[2] 43 (கண்டுபிடிக்கப்பட்டது)[3] 24 சடலங்கள் (அடையாளங்காணப்பட்டன)[4][5] |
தப்பியவர்கள் | 0[2] |
வானூர்தி வகை | ஏர்பஸ் ஏ320-200 |
இயக்கம் | இந்தோனேசியா ஏர்ஏசியா |
வானூர்தி பதிவு | PK-AXC |
பறப்பு புறப்பாடு | ஜுவாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம், சுரபயா, இந்தோனேசியா |
சேருமிடம் | சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் |
விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[9] 29 டிசம்பர் அன்று மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேசியா அறிவித்தது.[10][11]
இந்தோனேசியா ஏர்ஏசியா என்பது மலேசியாவின் குறைந்த-கட்டண விமானசேவையான ஏர்ஏசியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டில் ஏற்கனவே மலேசியா ஏர்லைன்சின் மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, 239 பேருடன் காணாமல் போனது, மலேசியா ஏர்லைன்சு 17 விமானம் 298 பேருடன் விபத்துக்குள்ளாகியது.[12]
கடந்துவிட்ட நேரம் | நேரம் | நேரம் | ||
---|---|---|---|---|
ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் | இந்தோனேசிய நேரம் ஒ.ச.நே+7 |
சிங்கப்பூர் நேரம் ஒ.ச.நே+8 | ||
00:00 | டிசம்பர் 27 | டிசம்பர் 28 | ஜுஅண்ட சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் புறப்பட்டு சென்றது [13] | |
22:35 | 05:35 | 06:35 | ||
00:42 | 23:17 | 06:17 | 07:17 | இந்தோனேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது [14] |
01:49 | டிசம்பர் 28 | 07:24 | 08:24 | ஜுஅண்ட சர்வதேச விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அறை தகவல் ரேடாரில் இருந்து மறைந்தது [14][15] |
00:24 | ||||
01:55 | 00:30 | 07:30 | 08:30 | சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தை சென்றடைய வேண்டும் [13] |
நாடு | எண்ணிக்கை. |
---|---|
155 | |
3 | |
1 | |
1 | |
1 | |
1 | |
மொத்தம் | 162 |
விமானத்தில் பயணித்தவர்களில் 145 பெரியவர்கள் 16 குழந்தைகள் மற்றும் 1 கைக்குழந்தை என மொத்தம் 162 பயணிகள் பயணித்ததாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.[17]
தேடுதல் பணியில் இந்தோனேசியா நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும், மலேசிய நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் விமானம் ஒன்றும் ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்பணியில் உதவ ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்வந்துள்ளன. டிசம்பர் 28, 2014 அன்று தேடுதல் வெளிச்சமின்மையால் மாலையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
காணமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் 37.57 மீட்டர் நீளமும் 34.10 மீட்டர் அகலமும் உடையது. இவ்விமானத்தின் விமானி இரியாண்டோ (Irainto) 20,537 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். மேலும் அவர் இந்தோனேசியாவின் ஏரேசியா ஏர்பஸ் ஏ320-200 வகை விமானத்தை 6,100 மணி நேரம் ஓட்டிய அனுபவம் உடையவர். துணை விமானி பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2275 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 விமானம் கடைசியாக 2014, நவம்பர் 16 அன்று வழக்கமான திட்டமிடப்பட்ட கண்காணிப்பு மற்றும் பழுது நீக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானம் ஆறு வயதிற்கும் சற்று அதிகமானது ஆகும்.
காணாமல் போன ஏர் ஏசியா விமானம் விபத்திற்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இவ்விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.[18] இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.[18][19]