From Wikipedia, the free encyclopedia
லியூ சியாபோ (Liu Xiaobo, டிசம்பர் 28, 1955 - சூலை 13, 2017)[1][2] என்பவர் ஒரு சீன எழுத்தாளர், அரசியல் விமரிசகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார். 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சீனாவில் அரசியல் சீர்திருத்தம் வேண்டியும், கம்யூனிஸ்டுகளின் ஒரு-கட்சி ஆட்சி முறையையும் எதிர்த்துப் போராடி, உரிமைச் சாசனம் 08 எழுதியவர்.[3] 2009ம் ஆண்டு, அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று இவரைக் குற்றஞ்சாட்டி சீன அரசு பதினொரு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.[4][5][6] கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரை 2017 சூன் 26 இல் சீன அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது. 2017 சூலை 13 அன்று இவர் மருத்துவமனையில் காலமானார்.[7]
லியூ சியாபோ 刘晓波 | |
---|---|
பிறப்பு | சாங்சுன், சிலின், சீனா | 28 திசம்பர் 1955
இறப்பு | 13 சூலை 2017 61) சென்யாங், லியாவோனிங், சீனா | (அகவை
தேசியம் | சீன மக்கள் குடியரசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜீலின் பல்கலைக்கழகம் பீஜிங் சாதாரண பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | எழுத்தாளர், அரசியல் விமர்சகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர். |
விருதுகள் | 2010 நோபெல் அமைதிப் பரிசு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.