From Wikipedia, the free encyclopedia
லியாவோனிங் (சீனம்: 辽宁省; பின்யின்: ⓘ), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணம் 1907இல் பெங்டியன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1929இல் லியாவோனிங் எனப் பெயர் மாற்றம் பெற்றது. யப்பானியப் பொம்மை ஆட்சியான மஞ்சுகோ ஆட்சியின் கீழ் இது முன்னைய பெயருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1945 மற்றும் 1954இல் மீண்டும் லியோனிங் எனப் பெயர்மாற்றம் பெற்றது.
லியாவோனிங் மாகாணம்
| |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | (Liáoníng Shěng) |
• சுருக்கம் | 辽 (pinyin: Liáo) |
சீனாவில் அமைவிடம்: லியாவோனிங் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | லியாவோ ஆறு |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | சென்யாங் |
பிரிவுகள் | 14 அரச தலைவர், 100 கவுண்டி மட்டம், 1511 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | லீ சீ |
• ஆளுநர் | சென் கிபா |
• பரப்பளவு தரவரிசை | 21வது |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 4,39,00,000 |
• தரவரிசை | 14வது |
அடர்த்தி தரவரிசை | 15வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | Han – 84% மஞ்சு இனக்குழு – 13% Mongol – 2% Hui - 0.6% Korean – 0.6% Xibe – 0.3% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Northeastern Mandarin, Jiaoliao Mandarin, Beijing Mandarin, Pyongan Korean, Manchu |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-21 |
GDP (2014) | CNY 2.862 திரில்லியன் US$ 466 பில்லியன் (7வது) |
• per capita | CNY 65,210 US$ 10,615 (7வது) |
HDI (2010) | 0.740[2] (high) (6வது) |
இணையதளம் | www |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
இதன் தெற்கே மஞ்சள் ஆறும் தென்கிழக்கில் வட கொரியாவும் வடகிழக்கில் சிலின் மாகாணமும் தென்மேற்கில் ஏபெய் மாகாணமும் வடமேற்கில் உள் மங்கோலியாவும் எல்லைகளாக உள்ளன. வட கொரியாவுடனான எல்லையாக யாலு ஆறு விளங்குகின்றது.
வடகீழ்ச் சீனாவின் தெற்குப் பகுதியில் லியாவோனிங் அமைந்துள்ளது. இது கோயோசியோன், கோகுர்யோ, பல்கீ ஆகிய கொரிய ஆட்சிகளின் கீழும் யான் தேசம், ஆன் அரசமரபு ஆகிய சீன ஆட்சிகளின் கீழும் இருந்துள்ளது[3].
பெய்ஜிங்கிலிருந்து மொங்கோலியர்கள் வெளியேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின்னர், 1371இல் இப்பிரதேசம் மிங் அரசமரபினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இது மஞ்சு ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
லியாவோனிங்கை மூன்று புவியியல் பகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்குப் பகுதியில் உயர்நிலப் பிரதேசமும், மத்திய பகுதியில் சமவெளியும், கிழக்குப் பகுதியில் மலைகளுமாக இது காணப்படுகின்றது. உயரம் குறைந்த மலைகளைப் பெரிதும் கொண்ட மேற்குப்பகுதியிலுள்ள நுலு ஏரு மலைத்தொடர் ஏறத்தாழ உள் மங்கோலியாவுடனான எல்லையாக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் மிக உயர்ந்த இடமாக, கிழக்குப் பகுதியிலுள்ள மலைத்தொடர்களில் இருக்கும் 1336 மீட்டர் உயரமான உவாபோசி குன்று விளங்குகின்றது.
இம்மாகாணம் 14 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 100 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1511 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.
2011இல், லியாவோனிங் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2 ட்ரில்லியன் யுவான் ($348 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 41,782 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது.
பிரதான கைத்தொழில்களாக இரசாயன, உலோக, இலத்திரனியல் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான கைத்தொழில்கள் காணப்படுகின்றன. இரும்பு, உருக்கு மற்றும் உலோகங்களை வெட்டும் இயந்திரங்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முன்னணியான மாகாணமாக இது விளங்குகின்றது.
இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் மஞ்சு இனக்குழு (5.3 மில்லியன் மக்கள்), மொங்கோல் இனக்குழு (6.7 இலட்சம் மக்கள்), ஊய் இனக்குழு (2.6 இலட்சம் மக்கள்), கொரியர்கள் மற்றூம் சிபே இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இனப்பரம்பல் | ||
---|---|---|
இனம் | மக்கட்டொகை | சதவீதம் |
ஆன் சீனர் | 35,105,991 | 83.94% |
மஞ்சு இனக்குழு | 5,385,287 | 12.88% |
மொங்கோலியர் | 669,972 | 1.60% |
ஊய் இனக்குழு | 264,407 | 0.632% |
கொரியர்கள் | 241,052 | 0.576% |
சிபே இனக்குழு | 132,615 | 0.317% |
இங்கு மக்கள் விடுதலை இராணுவ சேவையிலுள்ளோர் உள்ளடக்கப்படவில்லை.
மூலம்: Department of Population, Social, Science and Technology Statistics of the National Bureau of Statistics of China and Department of Economic Development of the State Ethnic Affairs Commission of China, eds. Tabulation on Nationalities of 2000 Population Census of China. 2 vols. Beijing: Nationalities Publishing House (民族出版社), 2003. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-05425-5)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.