Remove ads
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க புரட்சிப் போர் 18-ஆம் நூற்றாண்டில் பதின்மூன்று குடியேற்றங்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்களைக் குறிக்கும்.
அமெரிக்க புரட்சிப் போர் American Revolutionary War |
|||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
' |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
ஐக்கிய அமெரிக்கா பிரான்சு (1778–83) எசுப்பானியா (1779–83) இடச்சுக் குடியரசு (1780–83) Co-belligerents: | பெரிய பிரித்தானியா
Co-belligerents |
||||||||
பலம் | |||||||||
உச்சத்தில்: 35,000 Continentals | உச்சத்தில்: 56,000 பிரித்தானிய |
||||||||
இழப்புகள் | |||||||||
அமெரிக்கர்: 25,000 இறப்பு
மொத்த அமெரிக்க இறப்பு: 50,000 வரை இறப்பு மற்றும் காயம்[7]
| 20,000± பிரித்தானிய படையினர் இறப்பு மற்றும் காயம்
19,740 மாலுமிகள் இறப்பு (1,240 போரில்) [3] |
1763-இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தபின் ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரிகளை அதிகரித்ததன் காரணமாக புரட்சிக் காலம் தொடங்கியுள்ளது. 1770-இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின. 1776-இல் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை வெளியிடப்பட்டது. 1781-இல் அமெரிக்கப் படையினர் போரில் வெற்றி பெற்றனர்.
அமெரிக்கப் புரட்சி காலத்தில் தொடங்கிய பல விழுமியங்கள் அமெரிக்கச் சமூகத்தில் இன்று வரை அமெரிக்க அரசியலில் தாக்கம் செய்கின்றன.
இந்த அமெரிக்கப் புரட்சிப் போர் அமெரிக்க புரட்சியின் காரணமாக நடைபெற்றது. பிரித்தானியப் பாராளுமன்றமானது தனதுகுடியேற்ற நாடுகளின் இராணுவப் பாதுகாப்புக்காகச் செலவிடும் நிதியை அந்தக் குடியேற்ற நாடுகளிடமிருந்து வரியாகப் பெற்றுக்கொள்ள உரிமை இருக்கின்றது என வலியுறுத்தியது. ஏனெனில் பிரெஞ்சு மற்றும் இந்தியப் போர்களின் காரணமாக இராணுவப் பாதுகாப்புக்கான நிதி அதிகமாக விலையுயர்ந்திருந்தது. ஆனால் குடியேற்ற நாடுகள் தாம் ஏற்கனவே உள்ளூர் அரசாங்கத்தின் மூலம் அதிக நிதியை அவர்களுக்காகச் செலவு செய்ததால் அவர்களது கொள்கையை எதிர்த்தனர்.
இந்த அமெரிக்கப் புரட்சிப் போரினால் ஏற்பட்ட மொத்த உயிர்ச்சேதங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் அறியப்படாமலே இருக்கின்றது. அந்த சகாப்தத்தில் நடைபெற்ற போர்களைப் போல இந்தப் போரிலும் போரினால் இறந்ததை விட அதிகமான மக்கள் பரவிய நோய்களின் காரணமாக இறந்தனர். 1775 இற்கும் 1782 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெரியம்மைத் தொற்றுநோய் வட அமெரிக்கா எங்கும் பரவி 130,000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். வரலாற்றியலாளரான ஜோசப் எலிஸ், தனது படைகள் பெரியம்மைத் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி எடுக்க வேண்டும் என்று வாஷிங்டன் முடிவு செய்ததாகக் குறிப்பிடுகின்றார்.
இராணுவ சேவையின் போது 25,000 இற்கும் அதிகமான அமெரிக்கப் புரட்சியாளர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 8,000 புரட்சியாளர்கள் போரினாலும், ஏனைய பதிவுசெய்யப்பட்ட 17,000 இறப்புக்கள் நோய்களின் காரணமாகவும் இறந்தனர். இவர்களில் 8,000 முதல் 12,000 வரையான புரட்சியாளர்கள் போர்க் கைதிளாகப் பிடிபட்டு பட்டினி அல்லது மோசமான நிலைமை கொண்டுள்ள நோயின் காரணமாக உயிரிழந்தனர். அவர்களுள் பலர் நியூயார்க்கில் இறருந்த பிரித்தானியச் சிறைக் கப்பல்களில் உடல் அழுகி இறந்தனர். இதில் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்தப் புரட்சியாளர்களில் 8,500 முதல் 25,000 வரையானோர் போரினால் படுகாயமடைந்தனர் அல்லது ஊனமுற்றனர். ஆகவே மொத்த அமெரிக்க இராணுவ உயிர்ச்சேதங்களானது 50,000 இற்கும் அதிகமாக இருந்தது.
சுமார் 171,000 கடற்படையினர் யுத்தத்தின் போது ரோயல் கடற்படையில் பணியாற்றினார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.