ஏப்ரல் 11
நாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏப்ரல் 11 (April 11) கிரிகோரியன் ஆண்டின் 101 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 102 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.
<< | ஏப்ரல் 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMXXV | ||||||
நிகழ்வுகள்
- 491 – பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார்.
- 1034 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானசு அவரது மனைவியும் பேரரசியுமான சோயியின் கட்டளைப்படி கொல்லப்பட்டார்.
- 1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார்.
- 1241 – படு கான் மோகி சமரில் அங்கேரியின் நான்காம் பேலா மன்னரைத் தோற்கடித்தார்.
- 1689 – மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1713 – எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- 1829 – கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
- 1899 – எசுப்பானியா புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளித்தது.
- 1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
- 1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
- 1921 – யோர்தான் அமீர் அப்துல்லா புதிதாக உருவாக்கப்பட்ட பிரித்தானியக் காப்பரசான திரான்சுயோர்தானின் முதலாவது அரசை அமைத்தார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனிய புக்கென்வால்டு வதைமுகாமை விடுவித்தன.
- 1955 – ஆங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செசு என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர், மூவர் உயிர் தப்பினர். இவ்விமானத்தில் பயணம் செய்யவிருந்த சீனப் பிரதமர் சோ என்லாய் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.
- 1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒப்புதல் அளித்தது.
- 1961 – அடோல்வ் ஏச்மென் மீதான விசாரணைகள் எருசலேமில் ஆரம்பமாயின.
- 1965 – ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் உயிரிழந்தனர்.
- 1970 – அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.
- 1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றின. உகாண்டா அரசுத்தலைவர் இடி அமீன் நாட்டை விட்டு வெளியேறினார்.
- 1981 – தெற்கு லண்டனில் பிரிக்சுடன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
- 1987 – இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையே இரகசிய உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.
- 2002 – தூனிசியாவில் அல் காயிதா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 – வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் ஊகோ சாவெசு பதவி விககக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 19 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – ஈரானிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக ஈரான் அரசுத்தலைவர் மகுமூத் அகமதிநெச்சாத் அறிவித்தார்.
- 2007 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
- 2011 – பெலருஸ் தலைநகர் மின்ஸ்க்கில் மெட்ரோ தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு, 204 பேர் காயமடைந்தனர்.
- 2012 – இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 2018 – அல்சீரியாவில் அந்நாட்டு வான்படையினரால் இயக்கப்படும் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 257 பேர் உயிரிழந்தனர்.
Remove ads
பிறப்புகள்
- 1798 – மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1854)
- 1827 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1890)
- 1862 – வில்லியம் வாலசு கேம்ப்பெல், அமெரிக்க வானியலாளர் (இ. 1938)
- 1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)
- 1887 – ஜாமினி ராய், இந்திய ஓவியர் (இ. 1972)
- 1906 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், கவிஞர், எழுத்தாளர் (இ. 1988)
- 1908 – சி. பி. சிற்றரசு, தமிழக அரசியல்வாதி, பேச்சாளர் (இ. 1978)
- 1910 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)
- 1916 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (இ. 2001)
- 1934 – சீலன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 2015)
- 1937 – இராமநாதன் கிருஷ்ணன், இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர்
- 1952 – இந்திரா சமரசேகர, இலங்கைப் பொறியியலாளர்
- 1953 – ஆண்ட்ரூ வைல்சு, ஆங்கிலேய கணிதவியலாளர்
- 1963 – பில்லி பௌடன், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர், நடுவர்
Remove ads
இறப்புகள்
- 678 – டோனுஸ் (திருத்தந்தை)
- 1875 – சாமுவேல் சுகுவாபே, செருமானிய வானியலாளர் (பி. 1789)
- 1918 – ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841)
- 2007 – கர்ட் வானெகெட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1922)
- 2020 – அய்க்கண், தமிழக எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் (பி. 1935)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads