1909 (MCMIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
விரைவான உண்மைகள் ஆயிரமாண்டு:, நூற்றாண்டுகள்: ...
மூடு
- சனவரி 7 – கொலம்பியா பனாமாவின் விடுதலையை ஏற்றுக்கொண்டது.
- சனவரி 28 – 1898 எசுப்பானிய-அமெரிக்கப் போருக்குப் பிறகு கடைசி அமெரிக்கப் படையினர் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் ஏனைய பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
- பெப்ரவரி 5 – லியோ பேக்லேண்டு என்ற பெல்சிய வேதியியலாளர் பேக்கலைட் என்ற கடினமான வெப்பத்தால் இறுகும் நெகிழியை உருவாக்கியதாக அறிவித்தார்.
- மார்ச்சு 4 – வில்லியம் டாஃப்ட் ஐக்கிய அமெரிக்காவின் 27-ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
- மார்ச்சு 10 – பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை பேங்காக்கில் கையெழுத்திடப்பட்டது.
- மார்ச்சு 18 – எய்னார் தேசாவு என்பவர் டென்மார்க்கில் சிற்றலை வானொலி அலைபரப்பியை அறிமுகப்படுத்தினார்.[1]
- மார்ச்சு 21 – பகாய் சமயத்தைத் தொடங்கிய பாபின் எச்சங்கள் கைஃபாவில் கார்மேல் மலையில் வைக்கப்பட்டது.
- மார்ச்சு 31 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை செர்பியா ஏற்றுக் கொண்டது.
- மார்ச்சு 31 – டைட்டானிக் கப்பலின் கட்டுமானப் பணிகள் பெல்பாஸ்ட்டில் தொடங்கியது.
- ஏப்ரல் 11 – டெல் அவீவ் நகரம் யூதர்களால் யோப்பாவின் (அன்றைய உதுமானியப் பேரரசு) அருகில் அமைக்கப்பட்டது. .
- ஏப்ரல் 14 – உதுமானியத் துருக்கிகள் 15,000–30,000 ஆர்மீனியக் கிறித்தவர்களைக் கொன்றனர்.
- ஏப்ரல் 18 – ஜோன் ஆஃப் ஆர்க் உரோமை நகரில் புனிதப்படுத்தப்பட்டார்.
- ஏப்ரல் 19 – ஆங்கிலோ-பாரசீக எண்ணெய்க் கம்பனி தொடங்கப்பட்டது.
- ஏப்ரல் 27 - துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.
- ஏப்ரல் 27 – உதுமானிய சுல்தான் இரண்டாம் அப்துல் அமீது பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவரது சகோதரன் ஐந்தாம் மெகுமுது புதிய சுல்தானாக நியமிக்கப்பட்டார்.
- சூன் 1 – இலங்கை, கொழும்பு நகரில் உள்ள இராணி மாளிகையில் நடைபெற்ற தமிழ்த் தலைவர்களின் மாநாட்டில், ஆளுநர் சேர் என்றி மெக்கலம் தலைமை தாங்கினார். இலங்கைத் தமிழர்களின் முதன்மையான அடையாளமாக வழங்கப்படும் அதிகார் பதவியை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.[2]
- சூன் 15 – இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிகள் இலார்ட்சில் சந்தித்து, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையைத் தொடங்கின.
- சூலை 1 – இலண்டனில், இந்தியத் தேசியவாத மாணவர் மதன் லால் டிங்கரா, இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் அரசியல் உதவியாளரான கர்சன் வில்லியை படுகொலை செய்தார்.
- சூலை 26 – ஆத்திரேலியாவில் பிரித்தானியா நோக்கிச் சென்ற வராட்டா என்ற பயணிகள் கப்பல் டர்பனில் 211 பேருடன் காணாமல் போனது.
- சூலை – இலங்கையில் மன்னாருக்கான தொடருந்துப் பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.[2]
- அக்டோபர் 26 – சப்பானியப் பிரதமர் இட்டோ இரொபூமி கொரிய விடுதலை இயக்க செயற்பாட்டாளரான ஆன் சுங்-கெயும் என்பவரால் மஞ்சூரியாவில் வைத்துக் கொல்லப்பட்டார்.
- நவம்பர் 18 – நிக்கராகுவாவில், 2 அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அந்நாட்டின் தலைவர் ஒசே சாண்டோசு செலாயாவின் உத்தரவின்படி, சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- சனவரி 22 – ஊ தாண்ட், ஐநா பொதுச் செயலர் (இ. 1974)
- பெப்ரவரி 11 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1993)
- பெப்ரவரி 16 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (இ. 1969)
- பெப்ரவரி 26 – தலால், யோர்தான் மன்னர் (இ. 1972)
- ஏப்ரல் 22 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய நரம்பியலாளர் (இ. 2012)
- ஏப்ரல் 30 – யூலியானா, நெதர்லாந்து அரசி (இ. 2004)
- சூலை 16 – அருணா ஆசப் அலி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1996)
- சூலை 19 – பாலாமணியம்மா, இந்தியக் கவிஞர் (இ. 2004)
- செப்டம்பர் 15 – சி. என். அண்ணாதுரை, தமிழ்நாடு முதலமைச்சர் (இ. 1969)
- நவம்பர் 17 – சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
- நவம்பர் 19 - பீட்டர் ட்ரக்கர், மேலாண்மைத்துறை எழுத்தாளர் (இ. 2005)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 90