சூலை 1 (July 1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
- 1523 – பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
- 1569 – போலந்தும் லித்துவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது.
- 1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது.
- 1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார்.
- 1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.[1]
- 1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
- 1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- 1858 – சார்லஸ் டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
- 1862 – உருசிய மாநில நூலகம் திறக்கப்பட்டது.
- 1863 – நெதர்லாந்தினால் அடிமை முறை தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை ஆரம்பமானது.
- 1867 – 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1873 – இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
- 1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.
- 1881 – உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவின் சென். இசுடீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.[2]
- 1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.
- 1903 – முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.
- 1916 – முதல் உலகப் போர்: பிரான்சின் சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக் குடியேற்றத்தை தடை செய்தது.
- 1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
- 1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1933 – வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது.
- 1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
- 1948 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை ஆரம்பித்தார்.
- 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
- 1958 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.
- 1959 – பன்னாட்டு யார், பவுண்டு மற்றும் அங்குலம், மைல், அவுன்சு ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய நாடுகளில் அமுலுக்கு வந்தது.
- 1960 – கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.
- 1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
- 1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.
- 1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1966 – கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1967 – தேய்வழிவுப் போர் இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே தொடங்கியது.
- 1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
- 1976 – போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கியது.
- 1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது.
- 1980 – "ஓ கனடா" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1983 – வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
- 1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
- 1991 – பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
- 2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.
- 2004 – காசினி-ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
- 2007 – இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
- 2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.
- 2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.
- 2016 – லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.
- 1646 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1716)
- 1794 – இவான் சீமொனொவ், உருசிய வானியலாளர் (இ. 1855)
- 1847 – வில்லியம் ஸ்கேன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (இ. 1903)
- 1864 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912)
- 1882 – பிதான் சந்திர ராய், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (இ. 1962)
- 1904 – பி. சந்திர ரெட்டி, இந்திய நீதியரசர் (இ. 1976)
- 1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972)
- 1913 – வசந்தராவ் நாயக், மகாராட்டிராவின் 3வது முதலமைச்சர் (இ. 1979)
- 1913 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000)
- 1914 – பொன். கந்தையா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1960)
- 1916 – இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி, உக்ரைனிய வானியலாளர் (இ. 1985)
- 1919 – கே. ஆர். கல்யாணராமன், தமிழக எழுத்தாளர் (இ. 2001)
- 1924 – தி. ச. வரதராசன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- 1924 – கே. எம். பஞ்சாபிகேசன், இலங்கை நாதசுரக் கலைஞர் (இ. 2015)
- 1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.
- 1927 – சந்திரசேகர், இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007)
- 1929 – ஏ. எம். ராஜா, தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1989)
- 1934 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011)
- 1935 – கோவை ஞானி, தமிழக எழுத்தாளர், மார்க்சியத் திறனாய்வாளர் (இ. 2020)
- 1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008)
- 1938 – துரைமுருகன், தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்
- 1938 – ஹரிபிரசாத் சௌரசியா, இந்திய புல்லாங்குழல் இசைக்கலைஞர்
- 1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்
- 1945 – விசு, தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் (இ. 2020)
- 1947 – சரத் யாதவ், இந்திய அரசியல்வாதி (இ. 2023)
- 1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி
- 1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்
- 1955 – அகுஸ்டோ டி லூக்கா, இத்தாலியப் புகைப்படக் கலைஞர்
- 1955 – லீ கெச்சியாங், சீனாவின் 7வது பிரதமர்
- 1961 – கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்டவீரர்
- 1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
- 1961 – டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
- 1968 – இரசீத் கான், இந்துத்தானி இசைக்கலைஞர் (இ. 2024)
- 1977 – லிவ் டைலர், அமெரிக்க நடிகை
- 1242 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1183)
- 1824 – லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762)
- 1896 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1811)
- 1912 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமானி (பி. 1875)
- 1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)
- 1962 – பிதான் சந்திர ராய், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1882)
- 1971 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1890)
- 1983 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1895)
- 1991 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1915)
- 2003 – செமியோன் யாகோவிச் பிரவுதே, உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)
- 2004 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (பி. 1924)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 14