From Wikipedia, the free encyclopedia
யுனைடெட் ஏர்லைன்ஸ் அமெரிக்காவின் முக்கிய விமான சேவைகளில் ஒன்று. இதன் தலைமையகம் சிக்காகோவில் (லினோயிஸ்) அமைந்துள்ளது.[6][7] விமானச் சேவைகளின் இலக்குகள் அடிப்படையிலான பட்டியலில் யுனைடெட் ஏர்லைன்ஸ் முதலிடத்தில் உள்ளது. [8] யுனைடெட் ஏர்லைன்ஸ் சுமார் ஒன்பது விமானச்சேவை தலைமையிடங்களைக் கொண்டுள்ளது. இந்த தலைமையகங்கள் அமெரிக்க கண்டம், குவாம் மற்றும் ஜப்பன் நாடுகளின் பகுதிகளில் உள்ளன.[9] இதில் அமெரிக்காவின் ஹவுஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் இன்டர்கான்டினென்டல் விமான நிலையம், பயணிகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய விமானச் சேவை தலைமையகம் ஆகும். இந்த விமான நிலையத்தினை ஒரு நாளுக்கு சராசரியாக 45,413 பயணிகள் என்ற விகிதத்தில் ஆண்டிற்கு சுமார் 16.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் சிக்காக்கோவின் ஓ’ஹார் விமான நிலையம் தினசரி பயணிகளின் அடிப்படையில் அதிகளவிலான எண்ணிக்கையினைக் கொண்டுள்ளது.
| |||||||
நிறுவல் | April 6, 1926[1] | (தொடக்ககாலப் பெயர்: வார்னே ஏர்லைன்ஸ் ( Varney Air Lines))||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | மார்ச் 28, 1931[2] | ||||||
AOC # | CALA014A [3] | ||||||
மையங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | மைலேஜ் பிளஸ் | ||||||
கூட்டணி | ஸ்டார் லையன்ஸ் | ||||||
கிளை நிறுவனங்கள் | Subsidiaries List[4]
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 693 (முதன்மைவழி மட்டும்) | ||||||
சேரிடங்கள் | 374 (முதன்மைவழி மற்றும் வட்டார) | ||||||
தாய் நிறுவனம் | யுனைடெட் கான்டினெட்டல் ஹோல்டிங்ஸ், Inc. | ||||||
தலைமையிடம் | வில்லீஸ் டவர், சிகாகோ, இல்லினாய்ஸ் (இல்லினாய்ஸ் மாகாணம்), ஐக்கிய அமெரிக்கா | ||||||
முக்கிய நபர்கள் | ஜெஃப் ஸ்மிசெக் (Jeff Smisek) (தலவர் & முதன்மைச் செயலதிகாரி) வால்ட்டர் T. வார்னே (நிறுவனர்)[5] | ||||||
Revenue | US$ 38.279 பில்லியன் (2013)[5] | ||||||
இயக்க வருவாய் | US$ 1.249 billion (2013)[5] | ||||||
நிகர வருவாய் | US$ 571 மில்லியன் (2013)[5] | ||||||
மொத்த சொத்துக்கள் | ▼ US$ 36.812 பில்லியன் (2013)[5] | ||||||
மொத்த சமபங்கு | US$ 2.984 பில்லியன் (2013)[5] | ||||||
பணியாளர்கள் | 87,000 (2013)[5] | ||||||
வலைத்தளம் | www |
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், சிக்காக்கோவின் வில்லிஸ் டவரில் தலைமையகத்தினை பராமரிக்கும்போது ஏறக்குறைய 88,500 க்கும் அதிகமான வேலையாட்களைக் கொண்டிருந்தது. உள்ளூர் விமானச் சேவையில் யுனைடெட் ஏர்லைன்ஸ்க்கு போட்டியாளர்களாக டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியோர் உள்ளனர். நவம்பர் 2013 ன் படி, யுனைடெட் எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், சில்வர் ஏர்வேஸ் மற்றும் ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் துணைகொண்டு அமெரிக்காவின் உள்ளூர் விமான நிலையங்களுக்கு அடிப்படை விமானச் சேவைகளைச் செய்ததற்காக சுமார் 31,660,221 டாலர்களை கூட்டமைப்பு மானியங்களாக பெற்றுள்ளது.[10]
அமெரிக்காவின் புறப்பாடு தலைமை மையங்களைப் பொறுத்து இலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. (2014 ஆம் ஆண்டின் முதல் கால்பகுதியின்படி)
இடம் | விமான நிலையம் | விமானங்களின் எண்ணிக்கை |
---|---|---|
1 | சிக்காக்கோ – ஓ’ஹார், லினோயிஸ் | 585 |
2 | ஹவுஸ்டன், டெக்ஸாஸ் | 560 |
3 | நியூயார், நியூ ஜெர்சி | 385 |
4 | டென்வெர், கொலொரடோ | 375 |
5 | சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா | 300 |
6 | வாஷிங்கடன்-டுல்லெஸ், விர்ஜெனியா | 270 |
7 | லாஸ் ஏஞ்செல்ஸ், கலிஃபோர்னியா | 200 |
8 | குவாம் | 30 |
9 | டோக்யோ, ஜப்பான் | 18 |
யுனைடெட் ஏர்லைன்ஸ் 78 உள்நாட்டு முக்கிய இலக்குகளுக்கும், 109 சர்வதேச இலக்குகளுக்கும் விமானச்சேவையினை செயல்படுத்துகிறது. இந்த சர்வதேச விமானச்சேவையில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியனியா மற்றும் ஆஃப்ரிக்கா உட்பட 70 நாடுகள் அடங்கும்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் 696 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இதன் சராசரி வயது 13.6 ஆண்டுகள் ஆகும். டிசம்பர் 2014 ன் படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்வரும் விமான ரகங்களைக் கொண்டுள்ளது.[11]
விமான ரகம் | சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை | ஆர்டர்கள் | விருப்பங்கள் |
---|---|---|---|
ஏர்பஸ் A319-100 | 55 | ||
ஏர்பஸ் A320-200 | 97 | ||
ஏர்பஸ் A350-1000 | 35 | 40 | |
போயிங் 737-700 | 36 | ||
போயிங் 737-800 | 130 | ||
போயிங் 737-900 | 12 | ||
போயிங் 737-900ER | 105 | 30 | |
போயிங் 737-737 MAX 9 | 100 | ||
போயிங் 747-400 | 24 | ||
போயிங் 757-200 | 77 | ||
போயிங் 757-300 | 21 | ||
போயிங் 767-300ER | 35 | ||
போயிங் 767-400ER | 16 | ||
போயிங் 777-200 | 19 | ||
போயிங் 777-200ER | 55 | ||
போயிங் 787-8 | 12 | 35 | |
போயிங் 787-9 | 2 | 24 | |
போயிங் 787-10 | 27 | ||
மொத்தம் | 696 | 216 | 75 |
ஜனவரி 2014 ன் படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் யுனைடெட் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுடன் கூட்டு பங்காண்மை வைத்துக் கொண்டதுடன் மட்டுமல்லாமல், பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் மற்றும்/அல்லது விற்றல் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
ஒன்வேர்ல்டு உடன் இணைவதற்கு முன்பே யுனைடெட் நிறுவனம் யு.எஸ்.ஏர்வேஸ் நிறுவனத்துடன் விற்றல் ஒப்பந்தம் செய்திருந்தது.
யுனைடெட் ஏர்லைன்ஸின் முக்கிய வழித்தடங்களான ஹோனோலுலு – கஹுலி, கஹுலி – ஹோனோலுலு, டோரொன்டோ – நியூயார்க் மற்றும் வாஷிங்டன் – நியூயார்க் போன்ற வழித்தடங்களுக்கு வாரம் முறையே 135, 132, 103 மற்றும் 97 விமானங்களை செயல்படுத்துகிறது. அவ்வப்போது தேவைப்படும் சேவைகளுக்காக டெஸ் மொய்ன்ஸ் - ஜாக்சன் மற்றும் ஜெனிவா – ஏதென்ஸ் போன்ற வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஆண்டுகள் | விமானங்களின் பெயர் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1930 | NC13304 | விமானம் 6 | விமானம் 4 | NC13323 | NC13355 | ||
1940 | விமானம் 521 | விமானம் 608 | விமானம் 624 | ||||
1950 | விமானம் 129 | விமானம் 610 | விமானம் 615 | விமானம் 409 | விமானம் 629 | விமானம் 718 | விமானம் 736 |
1960 | விமானம் 826 | விமானம் 859 | விமானம் 297 | விமானம் 823 | விமானம் 389 | விமானம் 227 | விமானம் 266 |
1970 | விமானம் 553 | விமானம் 2860 | விமானம் 173 | ||||
1980 | விமானம் 811 | விமானம் 232 | |||||
1990 | விமானம் 585 | விமானம் 826 | |||||
2000 | விமானம் 175 | விமானம் 93 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.