சூலை 10 (July 10) கிரிகோரியன் ஆண்டின் 191 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 192 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன.
- 1509 – ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர் (இ. 1564)
- 1682 – பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமானிய மதப்பரப்புனர், மொழியியலாளர் (இ. 1719)
- 1832 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (இ. 1897)
- 1856 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1943)
- 1871 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (இ. 1922)
- 1919 – கரிச்சான் குஞ்சு, தமிழக எழுத்தாளர் (இ. 1992)
- 1920 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2006)
- 1925 – மகாதீர் பின் முகமது, மலேசியாவின் 4வது பிரதமர்
- 1930 – இந்திரா பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர்
- 1931 – ஆலிசு மன்றோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் (இ. 2024)
- 1939 – சரத் அமுனுகம, இலங்கை அரசியல்வாதி.
- 1940 – மேக்நாத் தேசாய், இந்திய-ஆங்கிலேய பொருளியலாளர், அரசியல்வாதி
- 1944 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து-கனடிய நடிகர், நாடகக் கலைஞர் (இ. 2014)
- 1945 – வெர்ஜினியா வேடு, ஆங்கிலேய டென்னிசு ஆட்டக்காரர்
- 1947 – கோட்டா சீனிவாச ராவ், தென்னிந்திய நடிகர், பாடகர்
- 1949 – சுனில் காவஸ்கர், இந்தியத் துடுப்பாளர்
- 1950 – புரோகோபிசு பாவ்லோபூலோசு, கிரேக்க அரசியல்வாதி
- 1951 – ராஜ்நாத் சிங், இந்திய அரசியல்வாதி
- 1958 – எல். கைலாசம், தமிழக புதின எழுத்தாளர்
- 1959 – எலன் குராஸ், அமெரிக்க இயக்குநர், ஒளிப்பதிவாளர்
- 1960 – சேத் கோடின், அமெரிக்க எழுத்தாளர்
- 1968 – அசின் விராத்து, பர்மிய பௌத்த துறவி
- 1980 – ஜெசிக்கா சிம்சன், அமெரிக்க நடிகை, பாடகி
- விடுதலை நாள் (பகாமாசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1973)