சூலை 28 (July 28) கிரிகோரியன் ஆண்டின் 209 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 210 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன.
- 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார்.
- 1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது.
- 1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
- 1808 – இரண்டாம் மகுமுது உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமியக் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
- 1809 – தலவேரா சமரில் சர் ஆர்தர் வெல்லெசுலியின் பிரித்தானிய, போர்த்துக்கீச, எசுப்பானிய படைகள் யோசப் பொனபார்ட்டின் படைகளைத் தோற்கடித்தன.
- 1821 – ஜோஸ் டெ சான் மார்ட்டின் எசுப்பானியாவிடம் இருந்து பெருவின் விடுதலையை அறிவித்தார்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவில் இருந்து அமெரிக்கப் படைகளைத் துரத்தும் முயற்சியில் மூன்றாம் முறையாகத் தோல்வி கண்டன.
- 1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 1914 – செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் தொடுத்தது. முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1915 – ஐக்கிய அமெரிக்காவின் எயிட்டி மீதான 19-ஆண்டுகால ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
- 1917 – ஆபிரிக்க அமெரிக்கர் மீது நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து நியூயார்க்கில் அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றன.
- 1938 – அவாய் கிளிப்பர் அமெரிக்கப் பறக்கும் படகு குவாமிற்கும் மணிலாவிற்கும் இடையில் 15 பேருடன் காணாமல் போனது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் டொன்கின் நகரில் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் பிரெஞ்சு இந்தோசீனாவைக் கைப்பற்றின.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பர்கு நகர் மீது பிரித்தானியா நடத்திய குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு நெருப்புப்புயல் உண்டாகியதில் 42,000 பேர் உயிரிழந்தனர்.
- 1945 – அமெரிக்கப் போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
- 1948 – இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக உறுப்பினர்கள் சிங்கள மொழியில் உரையாற்றினர்.[1]
- 1957 – சப்பானின் மேற்கு கியூசூ, இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் உயிரிழந்தனர்.
- 1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
- 1972 – இந்தியா-பாக்கித்தான் அரசுகளுக்கிடையே பண்ணுறவாண்மையை மேம்படுத்துவதற்காக சிம்லா ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்திடப்பட்டது.
- 1976 – சீனாவில் டங்சான் நகரில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 242,769 பேர் உயிரிழந்தனர், 164,851 பேர் காயமடைந்தனர்.
- 1984 – 1984 ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பமானது. சோவியத் ஒன்றியம் கலந்து கொள்ளவில்லை.
- 1996 – தொல்பழங்கால மனிதனின் எச்சங்கள் வாசிங்டன் கெனெவிக் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
- 2001 – உலக நீச்சல் வாகையாளர் போட்டிகளில் ஆத்திரேலியாவின் இயன் தோப் ஆறு தங்கப் பதக்கங்களைப் பெற்ற முதலாவது நீச்சல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 2002 – உருசியா, மாஸ்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 16 பேரில் 14 பேர் உயிரிழந்தனர்,[2]
- 2005 – ஐரியக் குடியரசுப் படை வட அயர்லாந்தில் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
- 2006 – ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.
- 2010 – பாக்கித்தான் இசுலாமாபாத் வடக்கே பாக்கித்தானிய ஏர்புளூ விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 152 பேரும் உயிரிழந்தனர்.
- 2017 – ஊழல் குற்றச்சாட்டில் பாக்கித்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப்புக்கு உச்ச்சநீதிமன்றத்தினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
- 1635 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1703)
- 1892 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1962)
- 1902 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1994)
- 1907 – ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 1979)
- 1928 – கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (இ. 1999
- 1929 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், அமெரிக்காவின் முதல் சீமாட்டி (இ. 1994)
- 1930 – பிரோசா பேகம், வங்காளதேசப் பாடகி (இ. 2014)
- 1934 – வி. குமார், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1996)
- 1936 – சோபர்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்
- 1938 – ஆல்பர்ட் புஜிமோரி, பெருவின் 90வது அரசுத்தலைவர்
- 1951 – சந்தியாகோ கலத்ராவா, எசுப்பானியக் கட்டிடக் கலைஞர்
- 1954 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (இ. 2013)
- 1958 – டெர்ரி பாக்ஸ், கனடிய ஓட்ட வீரர், செயற்பாட்டாளர் (இ. 1981)
- 1971 – அபூ பக்கர் அல்-பக்தாதி, ஈராக்கின் இசுலாமிய அரசுத் தலைவர்
- 1974 – அலெக்சிசு சிப்ராசு, கிரேக்கத்தின் 186வது பிரதமர்
- 1983 – தனுஷ், தமிழகத் திரைப்பட நடிகர்
- 1986 – துல்கர் சல்மான், மலையாளத் திரைப்பட நடிகர்
- 1993 – ஹாரி கேன், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்
- 1741 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1678)
- 1750 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1685)
- 1930 – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடிய மருத்துவர் (பி. 1862)
- 1930 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய வேதியியலாளர் (பி. 1990)
- 1946 – அல்ஃபோன்சா, கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது புனிதப் பட்டம் கொடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் (பி. 1910)
- 1957 – எடித் அப்போட், அமெரிக்க பொருளியலாளர் (பி. 1876)
- 1968 – ஓட்டோ ஹான், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1879)
- 1972 – சாரு மசூம்தார், இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1918)
- 1982 – சா. கணேசன், தமிழக அரசியல்வாதி, சமூக ஆர்வலர், தமிழ் இலக்கியவாதி (பி. 1908)
- 1999 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1913)
- 2004 – பிரான்சிஸ் கிரிக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1916)
- 2009 – லீலா நாயுடு, இந்திய நடிகை (பி. 1940)
- 2015 – கிளைவ் ரைஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1949)
- 2016 – மகாசுவேதா தேவி, வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர் (பி. 1926)
"Principal Ceylon Events, 1948". Ferguson's Ceylon Directory, Colombo. 1949.