இந்திய இராணுவத் தளபதி From Wikipedia, the free encyclopedia
ஜெனரல் பரமசிவ பிரபாகர் குமாரமங்கலம் அல்லது ஜெனரல் குமாரமங்கலம் (General Paramasiva Prabhakar Kumaramangalam) , (1 சூலை 1913 – 13 மார்ச் 2000) , இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவராக 1967 முதல் 1970 வரை பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947, இந்திய சீனப் போர், மற்றும் 1965இந்திய-பாகிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். பிரித்தானிய இந்தியப் பேரரசின் இராணுவ விருதுகளை பெற்றவர்.
ஜெனரல் பி. பி. குமாரமங்கலம் | |
---|---|
பிறப்பு | குமாரமங்கலம், சென்னை மாகாணம், பிரித்தானியா இந்தியா | 1 சூலை 1913
இறப்பு | 13 மார்ச்சு 2000 86) சென்னை, தமிழ்நாடு | (அகவை
அடக்கம் | |
சார்பு | ஐக்கிய இராச்சியம் (1933-1947) இந்தியா (1947க்குப் பின்) |
சேவை/ | இந்திய இராணுவம் |
சேவைக்காலம் | 1933–1969 |
தரம் | தரைப்படைத் தலைவர் |
கட்டளை | கிழக்கு மண்டல இராணுவக் கட்டளைத் தலைவர் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் இந்திய பாகிஸ்தான் போர், 1947 இந்திய சீனப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1965 |
விருதுகள் | பத்ம விபூசன் பிரித்தானிய அரசின் இராணுவ விருதுகள் – (Distinguished Service Order (DSO) ஆர்டர் ஆப் பிரித்தானிய பேரரசு (Order of the British Empire (MBE) |
உறவினர் | பி. சுப்பராயன் (தந்தை) மோகன் குமாரமங்கலம் (சகோதரர்) |
மோகன் குமார மங்கலத்தின் உடன் பிறப்பான பி. பி. குமாரமங்கலம், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சுப்பராயனின் மகன் ஆவார். இங்கிலாந்து நாட்டின் ஈடன் கல்லூரியிலும், ராயல் இராணுவக் கழகத்திலும் படித்தவர். முதலில் பிரித்தானியப் பேரரசிலும், பின்னர் 12 நவம்பர் 1934இல் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் தரைப்படையில் அதிகாரியாகச் சேர்ந்தார்.[1][2] 2 மே 1935இல் லெப்டினண்ட் அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார்.[3]
இரண்டாம் உலகப்போரில் லிபியாவில் நடந்த போரில், இத்தாலி மற்றும் ஜெர்மன் இராணுவத்தால் போர்க் கைதியாக பிடிக்கப்பட்டு போரின் முடிவில் விடுவிக்கப்பட்டார்.[4]
இந்திய விடுதலைக்குப்பின் மே 1963இல் கிழக்கு மண்டல படைத்தலைவராகவும், 8 சூன் 1966இல் இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றவர். 36 ஆண்டு இராணுவப் பணியாற்றிய குமாரமங்கலம், 7 சூன் 1969இல் பணி ஓய்வு பெற்றார். 1970இல் பத்ம விபூசன் விருது பெற்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.