வட ஆள்புலம்

ஆசுத்திரேலியாவின் ஆட்சிப்பகுதி From Wikipedia, the free encyclopedia

வட ஆள்புலம்map

வட ஆள்புலம் (Northern Territory, சுருக்கமாக NT), முறையாக ஆத்திரேலியாவின் வடக்கு ஆள்புலம் [8][9] என்பது ஆத்திரேலியாவின் மத்திய, மத்திய-வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் உள்ளக ஆள்புலம் ஆகும். வட ஆள்புலத்தின் எல்லைகளாக, மேற்கே மேற்கு ஆத்திரேலியா, தெற்கே தெற்கு ஆத்திரேலியா, கிழக்கே குயின்சுலாந்து ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. வடக்கே, திமோர் கடல், அரஃபூரா கடல், கார்பெண்டாரியா வளைகுடா, மேற்கு நியூ கினி மற்றும் பல இந்தோனேசியத் தீவுகளும் அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் வட ஆள்புலம்Northern Territory, நாடு ...
வட ஆள்புலம்
Northern Territory
Flag of வட ஆள்புலம்Northern Territory
கொடி
அதிகாரப்பூர்வ முத்திரை வட ஆள்புலம்Northern Territory
சின்னம்
QLD
NSW
ACT
WA
NT
SA
VIC
TAS
States and territories of Australia
ஆத்திரேலியாவில் வட ஆள்புலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°S 133°E
நாடுஆத்திரேலியா
நியூ சவுத் வேல்சால் நிறுவப்படல்1825
தெற்கு ஆத்திரேலியாவிற்கு மாற்றம்1863
பொதுநலவாயத்திற்கு மாற்றம்1911
பொறுப்புள்ள அரசு1 சூலை 1978
தலைநகர்டார்வின்
12°26′17″S 130°50′28″E
நிருவாகம்17 உள்ளாட்சி அமைப்புகள்
பெரிய நகரம்தலைநகர்
Common languages
  • ஆங்கிலம்
  • பழங்குடி மொழிகள்
  • ஆத்திரேலியக் கிரியீல்
இடப்பெயரர்
  • டெரிட்டோரியன்
  • டாப் என்டர்[1][2]
அரசு
 மன்னர்
மூன்றாம் சார்லசு
 நிர்வாகி
ஹியூ ஹெகி
 முதலமைச்சர்
லியா பினச்சியாரோ (தாராளவாதக் கட்சி)
சட்டமன்றம்வட ஆள்புல சட்டப்பேரவை
நீதித்துறைமீஉயர் நீதிமன்றம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
2 உறுப்பினர்கள் (மொத்தம் 76)
2 இருக்கைகள் (மொத்தம் 151)
பரப்பளவு
 நிலம்
1,347,791 km2 (520,385 sq mi)
உயர் ஏற்றம்
(சீல் மலை)
1,531 m (5,023 ft)
மக்கள்தொகை
 திசம்பர் 2021 மதிப்பு
249,345[3] (8-ஆவது)
 அடர்த்தி
0.19/km2 (0.5/sq mi) (8-ஆவது)
மொத்த மாநில உற்பத்தி2020 மதிப்பு
 மொத்தம்
AU$26.153 பில்.[4] (8-ஆவது)
 தலைக்கு
AU$106,851 (2-ஆவது)
ம.மே.சு (2021) 0.940[5]
very high · 6-ஆவது
நேர வலயம்UTC+09:30 (ஆ.நே.வ)
அஞ்சல் குறியீடு
NT
ISO 3166 குறியீடுAU–NT
சின்னங்கள்
பறவைஆப்பு-வால் கழுகு
(Aquila audax)
மலர்பாலைவன ரோசா
(Gossypium sturtianum)[6]
நிறம்கருப்பு, வெள்ளை, காவி[7]
இணையதளம்nt.gov.au
மூடு

வட ஆள்புலம் 1,347,791 சதுர கிலோமீட்டர் (520,385 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது,[10] இது மூன்றாவது பெரிய ஆத்திரேலியக் கூட்டாட்சிப் பிரிவாக உள்ளது. திசம்பர் 2021 நிலவரப்படி இது 249,000 மக்கள்தொகையுடன் ஆத்திரேலியாவிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[3] டார்வின் இதன் தலைநகரும், மிகப்பெரிய மக்கள்தொகை மையமும் ஆகும், இது முழு ஆள்புலத்தின் மக்கள்தொகையில் 52.6% ஆகும். ஏறத்தாழ 25,000 மக்கள் வசிக்கும் மிகப்பெரிய உள்நாட்டு குடியேற்றம் ஆலிசு இசுபிரிங்சு ஆகும்.

வட ஆள்புலத்தின் தொல்பொருள் வரலாறு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு சாகுல் கண்டத்தின் இந்தப் பகுதியில் மனிதர்கள் முதன்முதலில் குடியேறியபோது தொடங்கியிருக்கலாம். குறைந்தது 18 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கசான் வணிகர்கள் கடல் நத்தை வர்த்தகத்தைச் சுற்றி வட ஆள்புலத்தின் பழங்குடி மக்களுடன் உறவைத் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் இந்நிலத்தின் கரையோரப் பகுதி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[11] இதன் கரையோரப் பகுதிகளில் குடியேற முயன்ற முதல் ஐரோப்பியர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர். அவர்கள் இங்கு ஒரு குடியேற்றத்தை நிறுவுவதற்கான மூன்று (1824-1828, 1838-1849, 1864-1866) தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, 1869 இல் டார்வின் துறையில் ஒரு குடியேற்றத்தை நிறுவுவதன் மூலம் வெற்றி அடைந்தனர்.

இதன் பொருளாதாரம் பெரும்பாலும் சுரங்கத் தொழிலையும், எண்ணெய் அகழ்வையும் அடிப்படையாகக் கொண்டது, இது 2018-2019 ஆம் ஆண்டில் மொத்த மாநில உற்பத்தியில் 23% பங்களித்தது, அல்லது $5.68 பில்லியன், இது ஏற்றுமதியில் 92.4% ஆகும்.[12][13]

வட ஆள்புலத்தின் மக்கள்தொகை கடலோரப் பகுதிகளிலும் இசுட்டூவர்ட் நெடுஞ்சாலை வழியேயும் குவிந்துள்ளது. டார்வின் தலைநகரைத் தவிர, முக்கிய குடியிருப்புகள் (அளவின்படி) பால்மர்ஸ்டன், ஆலிஸ் ஸ்பிரிங்ஸ், கேத்ரின், நுலுன்புய், டெனன்ட் கிரீக் ஆகியவை ஆகும். வட ஆள்புலத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் "ஆள்புலத்தோர்" (டெரிட்டோரியர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.[14]

ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், பிரதேசங்களின் வரைபடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.