Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan of Arc)[3] கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி [4] பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.[5] இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.
புனித ஜோன் ஆஃப் ஆர்க் | |
---|---|
கற்பனை ஓவியம், ca. 1485. (Centre Historique des Archives Nationales, பாரீஸ், AE II 2490) | |
கன்னியர் | |
பிறப்பு | ca. 1412 ஜனவரி 6[1] டாம்ரேமி, பிரான்சு[2] |
இறப்பு | 30 மே 1431 (அகவை 19) ரோவன், பிரான்சு (அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது) |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம் ஆங்கிலிக்க ஒன்றியம் |
அருளாளர் பட்டம் | ஏப்ரல் 18, 1909, நோட்ரே டேம் டி பாரிஸ் by பத்தாம் பயஸ் |
புனிதர் பட்டம் | மே 16, 1920, உரோம் by பதினைந்தாம் பெனடிக்ட் |
திருவிழா | மே 30 |
பாதுகாவல் | பிரான்சு; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; பெண் இராணுவத்தினர் |
ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார்.[6] அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.[7] 16ம் நூற்றாண்டில், ஜோன் ஆப் ஆர்க் பிரன்சு கத்தோலிக்க மதத்தின் சின்னமாக கருதப்பட்டார். பின்னர் 1803ம் ஆண்டில், நெப்போலியன் போனபர்ட் ஜோனின் வீரத்துக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் அவரை பிரான்சு நாட்டின் சின்னம் என்று கூறினார்.[8]
பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.
ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று, கிழக்கு பிரான்சில் 'டார்மெரி' என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், 'ஜாக்கஸ் தி ஆர்க்' மற்றும் இவரது தாயாரின் பெயர், 'இசபெல்'. இவர்கள் ஜோனுக்கு எழுதப் படிக்க கற்று தரவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தனர். ஆங்கிலேயர்களுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக, அவர் வாழ்ந்த பகுதியில் சண்டைகள் நடக்கும்.[9].
ஜோனுக்கு தமது 12 வயதிலிருந்தே, செவிவழி அருளும் அவ்வப்போது தெஉவீக தரிசணங்களும் கிட்டியதாக கூறப்படுகிறது. சிறுவயதில் தோன்றிய தரிசணங்களில் இறை பக்தி கொள்ளுமாரு அறிவுருத்தியதாகவும், இந்த தரிசணங்களில், புனித மைக்கேல், புனித கேத்தரீன், மற்றும் புனித மார்கரட் உருவங்கள், ஜோனுக்கு காட்சியளித்தாகவும் கூறப்படுகிறது. இதை அரசாங்க நூல்களும் உறுதி செய்கின்றன.[9] பின்னர் ஒரு நாள், பிரான்சை காப்பாற்ற ஜோனின் உதவி தேவை என்றும், 'அரசர் சாலர்ஸுக்குதான் பிரான்சை ஆட்சி செய்ய உரிமையுள்ளது' என்று தமக்கு அருள் கிட்டியதாக, அவரது சுயசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.[10]
இதன் பொருட்டு, ஜோனின் உறவினரான 'டியூரான்ட் லாஸ்ஸோஸிடம்', தம்மை சார்லஸின் ஆதரவாளாரான கோமான் ராபர்ட் தி பாட்ரிகோர்டிம் அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். ராபர்டிம் தான் அரசர் சார்லஸை சந்திக்க உதவுமாறு கேட்டாள். ஆனால் அவர் அதுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஜோனின் விடா முயற்சியால், இறுதியில் ஒப்புக்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் போர் நடந்துக் கொண்டிருந்ததால், அந்த கோமான் ஜோனை ஆண் போல வேடமிட்டு, ஆயுதமேந்திய துணைகளுடன் சினானுக்கு அனுப்பி வைத்தார்.
11 நாட்கள் பயனத்திற்கு பிறகு, ஜோன் ஆப் ஆர்க், 'சினான்' மார்ச் 4ம் தேதி வந்தடைந்தார். அரசவையில் ஜோனின் கட்டுக்கடங்கா உணர்ச்சியைக் கண்ட சார்லஸின் முகம் பிரகாசமடைந்தது.[9] பல வேதாந்த ஆய்வுகளுக்குப் பிறகு,[11]
மார்ச் 1429 அன்று, ஜோனின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசர் சார்லஸ், ஜோனுக்கு ஒரு படை அளித்து, அதன் படைத்தளபதியாகவும் நியமித்தார். ஜோன் வெள்ளை போர் கவசமும், ஒரு வெள்ளை குதிரையிலும் போருக்குச் சென்றார். ஒரு விவசாயி மகளாக இருந்த போதிலும், 17ம் வயதில் ஒரு அரசாங்கத்தின் படைத் தளபதியானது குறிப்பிடத்தக்கது. படைத்தளைபதியானப் பின், படை வீரர்களிடையே பல சீர் திருத்தங்கள் செய்தார். பிரான்சில் இருந்த ஆங்கிலேயரை ஓர்லியன்சை விட்டு விரட்ட ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் போர் தொடுத்தார். அவர் தளபதியாக பிரெஞ்ச் படையினரை வழிநடத்த, பிரான்சின் சார்லசு மன்னர் ஆதரவுடன் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை கைப்பற்றினர். போரில் ஜோன் ஆஃப் ஆர்க் படுகாயமுற்றார். இந்த வெற்றியால் ரைம்சு தேவாலயத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் முன்னிலையில் சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். இந்த வெற்றியால் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு, அரச குல உயர்குடி நிலை அளிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் பின்வாங்கி ஓடும் தருணத்தை பயன்படுத்தி, அரசர் சார்லஸை படைகளை முன்னோக்கி பாரிஸ் நகரத்தைக் கைப்பற்ற, ஜோன் வேண்டினார். ஜோன் ஒர்லியன்சைக் கோட்டையை கைப்பற்றிய போதிலும், அரசவையிலுள்ள மற்ற அமைச்சர்களுக்கு ஜோனின் மீது நம்பிக்கை வரவில்லை. ஆகையால் பாரிஸை நோக்கி படை எடுக்க வேண்டாம் என்று அரசருக்கு, அவர்கள் அறிவுறித்தினர்.
ஓர்லியன்ஸ் போரில் தோல்வியுற்றதால் ஆங்கிலக் படைத்தளபதிகளான ஜான் போயர், ஆயர் பீட்டர் கெளஸானும் ஜோன் ஆஃப் ஆர்க்கை பழிவாங்கத் திட்டமிட்டனர்.
அரசர் சார்லஸின் கட்டளையின் படி 'கோம்பைன்' நோக்கி அவரது தம்பி 'பியர்ரே'வுடன், ஆங்கிலேயர்களையும் புர்கண்டியேர்களையும் எதிர்க்கும் மக்களுக்கு உதவி செய்ய சென்றார். ஜோன் தன்னுடன் இருந்த சிறு படையுடனேயே போரிட்டு 'கோம்பைன்' மற்றும் சில தளங்களைப் பிடித்தார். பாரிசைத் தாக்கச் சென்ற ஜோன் ஆஃப் ஆர்க்கின் சிறுபடை சார்லசு மன்னரின் ஆதரவு இல்லாததால் பலம் குறைந்து தோல்வியுற்றுப் பின்வாங்கியது. காம்பைஞ் கோட்டைக்கு திரும்பும் போது ஜோன் ஆப் ஆர்க் தன் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு புர்கண்டியேர்கள் ஜோனைக் கடத்திச் சென்று சிறையிட்டனர்.
ஜோன் புர்கண்டி கோட்டையிலிருந்து தப்பிக்க பல முறை முயற்சி செய்தார். ஒரு சமயம், 70 அடி கோபுரத்திலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.[12]. இதனை அடுத்து, புர்கண்டியேர்கள் ஜோனை ஆங்கிலேயர்களிடம் 10000 காசுக்களுக்கு பரிமாற்றம் செய்தனர். ஆங்கிலேயர்கள் ஜோனை பாரீஸ் நகரத்துக்கு கொண்டு சென்றனர்.
உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டார். ஜோன் ஆப் ஆர்க்கை, போர் குற்றவாளியாக கருதாமல், கிருத்துவ மதத்திற்கு எதிரானவர் மற்றும் சூனியக்காரி போன்ற குற்றங்களைக் கொண்டு அவரது வழக்கை, இறையியல் நீதிமன்றத்தில் விசாரத்தனர். பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை, குறைந்தப் பட்சம் 12 முறையாவது, ஜோனை குறுக்கு விசாரணை செய்தனர். முதலில் ஜோனின் வழக்கை பொது மக்கள் முன்னிலையில் விசாரித்தனர். ஆனால் ஜோன் அளித்த சாமார்த்திய பதில்க்ளைக் கண்டப் பின்னர், ரகசிய விசாரணைகள் நடந்தது. ஜோனைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு இது பாடமாக இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.
ஆண்கள் உடையை அணிந்தது போன்ற ஏறத்தாழ 70 குற்றங்களைக் கொண்டு, இறையியல் நீதிமன்றம் ஜோனுக்கு மரணதண்டனை விதித்தது. அதன்படி தனது 19ம் வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க், சுமார் 10000 மக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[14]
ஜோனின் சாவிற்கு பிறகு, சுமார் 22 ஆண்டுகள், பிரன்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடந்தது. அதன் பின்னர், சார்லஸ் பிரன்சு நாட்டின் மகுடம் சூடினார். அரசர் சார்லஸ், ஒரு விசாரணை குழு வைத்து, ஜோன் நிரபராதி என தீர்ப்பு வழங்கினார். ஜோனுக்கு புனித பட்டம் மே 16, 1920ல் வழங்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.