சூன் 14 (June 14) கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV | ||||||
நிகழ்வுகள்
- 1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது.
- 1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான்.
- 1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர்.
- 1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான்.
- 1381 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். இலண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர்.
- 1404 – வேல்சின் கிளர்ச்சித் தலைவர் ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றிக்கு எதிராக பிரான்சுடன் இனைந்தார்.
- 1618 – இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது.
- 1645 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நேசுபி சமரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இடச்சுக் கடற்படை மெட்வே முற்றுகை முடிவுக்கு வந்தது. ஐந்து நாட்கள் நடந்த இச்சமரில் அரச கடற்படை பெரும் தோல்வியைக் கண்டது.
- 1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் முன்னாள் மன்னர் இரண்டாம் யேம்சுடன் சமரில் ஈடுபட அயர்லாந்து வந்தார்.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.
- 1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
- 1800 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
- 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய இராணுவத்தை போலந்து பிரீத்லாந்து சமரில் (இன்றைய உருசிய கலினின்கிராது) தோற்கடித்தன.
- 1822 – சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
- 1830 – அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது. 34,000 பிரெஞ்சுப் படையினர் அல்ஜியர்ஸ் நகரை அடைந்தனர்.
- 1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர்.
- 1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
- 1888 – வெள்ளை இராசா பிராந்தியங்கள் சரவாக் இராச்சியம் என்ற பெயரில் பிரித்தானியக் காப்புநாடாயின.
- 1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
- 1907 – நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
- 1926 – பிரேசில் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை செருமனி கைப்பற்றியது.
- 1940 – 728 போலந்துப் போர்க் கைதிகள் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
- 1941 – அனைத்து செருமனிய, இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
- 1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியத்தில் அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானிய இராணுவம் பெர்ச் நடவடிக்கையைக் கைவிட்டது.
- 1946 – மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.[1]
- 1949 – இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கிமீ (83 மைல்) உயரத்திற்கு சென்று, விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.
- 1959 – கியூபாவில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு டொமினிக்கன் குடியரசுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் பெரும்பாலானோர் அங்கு கொல்லப்பட்டனர்.
- 1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
- 1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்கெந்தீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன.
- 1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
- 2002 – புவியருகு விண்பொருள் "2002 எம்என்" 75,000 கிமீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றது.
- 2003 – விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- 2014 – உக்ரைனின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2017 – இலண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1444 – நீலகண்ட சோமயாஜி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1544)
- 1736 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1806)
- 1811 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க நூலாசிரியர், செயற்பாட்டாளர் (இ. 1896)
- 1864 – அலாய்ஸ் அல்சீமர், செருமானிய உளவியல் நிபுணர், மருத்துவர் (இ. 1915)
- 1868 – கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1943)
- 1889 – நட் உலுண்ட்மார்க், சுவீடிய வானியலாளர் (இ. 1958)
- 1928 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)
- 1928 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப மருத்துவர், மார்க்சியவாதி, புரட்சித் தலைவர், அரசியல்வாதி (இ. 1967)
- 1936 – எம். எஸ். கில், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
- 1946 – டோனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவர்
- 1948 – கௌதம நீலாம்பரன், தமிழக வரலாற்றுப் புதின எழுத்தாளர் (இ. 2015)
- 1961 – குயிலி, தமிழ்த் திரைப்பட நடிகை
- 1962 – எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூர் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர்
- 1967 – குமார் மங்கலம் பிர்லா, இந்தியத் தொழிலதிபர்
- 1968 – ராஜ் தாக்ரே, மகாராட்டிர அரசியல்வாதி
- 1969 – ஸ்டெபி கிராப், செருமானிய தென்னிசு வீராங்கனை
- 1986 – பிந்து மாதவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1992 – சீலா ராஜ்குமார், தமிழ் நடிகை, பரதநாட்டியக் கலைஞர்
இறப்புகள்
- 1801 – பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க இராணுவத் தலைவர், பிரித்தானிய உளவாளி (பி. 1741)
- 1920 – மக்ஸ் வெபர், செருமானிய சமூகவியலாளர், பொருளியலாளர் (பி. 1864)
- 1926 – மேரி கசாட், அமெரிக்க-பிரான்சிய ஓவியர் (பி. 1843)
- 1927 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1859)
- 1928 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (பி. 1857)
- 1936 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் (பி. 1874)
- 1946 – ஜான் லோகி பைர்டு, இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1888)
- 1961 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (பி. 1898)
- 1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)
- 1986 – ஓர்கே லூயிசு போர்கெசு, அர்ச்செந்தீன எழுத்தாளர் (பி. 1899)
- 2001 – சிறீபதி சந்திரசேகர், இந்தியக் கல்வியாளர், நூலாசிரியர், அரசியல்வாதி (பி. 1918)
- 2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் (பி. 1925)
- 2014 – தெலுங்கானா சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1951)
- 2019 – அ. தாமோதரன், தமிழக இந்தியவியலாளர் (பி. 1935)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (மலாவி)
- விடுதலை நாள் (போக்லாந்து தீவுகள், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)
- உலக குருதிக் கொடையாளர் நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.