From Wikipedia, the free encyclopedia
கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், (ஆங்கில மொழி: Gilbert Keith Chesterton 29 மே 1874 – 14 ஜூன் 1936) என்பவர் ஒரு ஆங்கிலேய எழுத்தாளரும்,[1] பொதுநிலை இறையியலாளரும், கவிஞரும், மெய்யியலாளரும், நாடக ஆசிரியரும், செய்தியாளரும், பேச்சாளரும், கிறித்தவ தன்விளக்க அறிஞரும் ஆவார். முரண்போலியின் இளவரசர் ("prince of paradox") எனப் பலராலும் இவர் அழைக்கப்பட்டார்.[2][3]
கி. கெ. செஸ்டர்டன் | |
---|---|
G. K. Chesterton, by E. H. Mills, 1909. | |
பிறப்பு | Gilbert Keith Chesterton 29 மே 1874 Kensington, London, England |
இறப்பு | 14 சூன் 1936 62) Beaconsfield, Buckinghamshire, England | (அகவை
தொழில் | பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் |
வகை | புனைவு, கிறித்தவ தன்விளக்கம், கிறித்தவ தன்விளக்கம், Mystery, கவிதை |
கையொப்பம் | |
கிறித்தவ நெறிக்காகக் காரணத்தை விளக்கிய முறையினாலும், தந்தை பிரௌன்[4] என்னும் புனைவு மாந்தருக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார். இவரோடு ஒத்தக்கருத்தில்லாதவர் கூட இவரின் படைப்புகளின் குறிக்கத்தக்கத்தன்மையினை ஏற்றுள்ளனர்.[3][5] அரசியல் கருத்துரையாளராய் இவர் பழைமைவாதம் மற்றும் முற்போக்குவாதம் ஆகிய இரண்டையும் குறைகூறினார். "தற்கால உலகு பழைமைவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள் என இரண்டாகப்பிரிந்துள்ளது. முற்போக்குவாதிகளுக்கு தவறுகள் செய்வதே தொழிலாக உள்ளது. பழமைவாதிகளுக்கு அத்தவறுகளை சரி செய்ய விடாமல் தடுப்பதே தொழிலாக உள்ளது." என்றார்.[6]
தன்னை அடிப்படைவாத கிறித்தவர் என அழைத்துக்கொண்ட இவர், இறுதி நாட்களில் ஆங்கிலிக்கத்திலிருந்து கத்தோலிக்க திருச்சபைக்கு மாறினார். இவரின் நண்பரான ஜார்ஜ் பெர்னாட் ஷா, இவரைப் பெரும் நுண்ணறிவாளர் எனப்புகழ்ந்துள்ளார்.[3] வரலாற்றாளர்கள் பலர் இவரை மேத்யு அர்னால்ட், தாமஸ் கார்லைல், கர்தினால் நியூமன், ஜான் இரஸ்கின் முதலியோரோடு ஒப்பிட்டு, அவர்களின் கலை வாரிசு இவர் எனப் புகழ்ந்துள்ளனர்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.