From Wikipedia, the free encyclopedia
அலாய்ஸ் அல்சீமர் (14 சூன் 1864–19 திசம்பர் 1915) என்பவர் செருமானிய உளவியல் நிபுணர் மற்றும் நரம்பியல் நோய் மருத்துவர் ஆவார். மறதி நோய் ஏற்படுவதன் மூல காரணங்களை ஆய்ந்து அதனைக் குணப்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிந்தவர். எனவே அந்த மறதி நோய்க்கு அவரது பெயரையே வைத்து 'அல்சிமர்ஸ் நோய்' எனப் பெயரிட்டு அழைக்கலாயினர்.[1]
அலாய்ஸ் அல்சீமர் | |
---|---|
பிறப்பு | 14 சூன் 1864 Marktbreit |
இறப்பு | 19 திசம்பர் 1915 (அகவை 51) விராத்ஸ்சாஃப் |
படித்த இடங்கள் |
|
பணி | மன நோய் மருத்துவர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மருத்துவர் |
வேலை வழங்குபவர் |
|
கையெழுத்து | |
செருமனியில் மார்க்கப்பிரிட் என்ற ஊரில் பிறந்த[2] அலாய்ஸ் அல்சீமர் இளம் பருவத்திலேயே அறிவியல் நாட்டம் கொண்டார். மருத்துவக் கல்வியிலும் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
1887 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு 1888 இல் பிராங்க்பர்ட் மருத்துவமனைகளில் பணி செய்தார். அவ்வமயம் 1901 ஆம் ஆண்டில் ஆகஸ்டு டிடர் என்னும் ஒரு பெண் மணியைச் சந்தித்தார் அந்தப் பெண்மணி குறுகிய கால மறதியினால் துன்புற்றத்தைக் கண்ட அலாய்ஸ் அல்சீமர் அந் நோய் குறித்து ஆராயத் தொடங்கினார். ஆகஸ்டு டிடர் இறந்ததால் அவருடைய உடலிலிருந்து மூளையைப் பிரித்தெடுத்து ஆராய்ந்தார். அதன் விளைவாகக் கிடைத்த உண்மைகளை 1906 இல் ஒரு சொற்பொழிவில் தெரியப்படுத்தினார். எமில் கிரேப்ளின் என்னும் செருமானிய உளவியல் நிபுணருடன் நட்புக் கொண்டதால் இருவரும் இணைந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்கள். 1910 ஆம் ஆண்டில் எமில் கிரேபிளின் தம் நண்பர் அலோயிஸ் அல்சீமரின் கண்டுபிடிப்பை ஒரு புத்தகத்தில் பதிவு செய்து உலகுக்கு அறிவித்தார்
அலாய்ஸ் அல்சிமர் மறதி நோய் மட்டுமல்லாது மூளையில் ஏற்படும் கட்டி, காக்காய்வலிப்பு போன்ற நரம்பு தொடர்பான நோய்கள் பற்றிய ஆய்வுகளையும் செய்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.