இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி From Wikipedia, the free encyclopedia
பிந்து மாதவி (தெலுங்கு: బిందు మాధవి) ஒர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பிந்து மாதவி | |
---|---|
பிறப்பு | சூன் 14, 1986 மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா, |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008 – தற்போதுவரை |
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி.[1] அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார்.[1] பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார்.[2] வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.[1][3]
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.[1][2] டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்குத் திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது.[1][4] இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை.[5] தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குநர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.[4] அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.[3]
ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | மொழி | தொலைக்காட்சி | குறிப்பு | Ref. | |
---|---|---|---|---|---|---|---|
2007-2011 | மகள் | அங்கீகரிக்கப்படாத பாத்திரம் | தமிழ் | சன் தொலைக்காட்சி | அறிமுகம் | ||
2017 | பிக் பாஸ் தமிழ் 1 | பங்கேற்பாளர் | தமிழ் | ஸ்டார் விஜய் | வெளியேற்றப்பட்ட நாள் - 96 | ||
2020 | மாஸ்டிஸ் | கௌரி | தெலுங்கு | ஆகா | [6] | ||
2022 | பிக்பாஸ் சீசன் 1 | பங்கேற்பாளர் | தெலுங்கு | ஹாட் ஸ்டார் | வெற்றி | [7] | |
2023 | ஆங்கர் டேல்ஸ் | ராதா | தெலுங்கு | ஹாட் ஸ்டார் | |||
2023 | நியூசென்ஸ் | தெலுங்கு | ஆகா[8] |
ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | குறிப்புகள் | Ref. |
---|---|---|---|---|
2008 | ஆவக்காய் பிர்யாணி | லட்சுமி ஜந்தியாலா | தெலுங்கு படம் | |
2009 | பொக்கிசம் | அஞ்சலி | ||
பம்பர் ஆஃபர் | ஐஸ்வர்யா | தெலுங்கு | ||
2010 | ஓம் சாந்தி | நூரி | தெலுங்கு படம் | |
ராம ராம கிருஷ்ண கிருஷ்ண | நந்து | தெலுங்கு | ||
பிரதி ரோஜூ | பினு | தெலுங்கு | ||
2011 | வெப்பம் (திரைப்படம்) | விஜி | ||
ஜமீன் (திரைப்படம்) | அமிர்தா | தெலுங்கு | ||
2012 | கழுகு | கவிதா | ||
சட்டம் ஒரு இருட்டறை | தியா | |||
2013 | கேடி பில்லா கில்லாடி ரங்கா | மித்ரா மீனலோசினி | ||
தேசிங்கு ராஜா (திரைப்படம்) | தாமரை | |||
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) | கல்யாணி | சிறப்புத் தோற்றம் | ||
2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | மலர் | ||
2015 | தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் | சிமி | ||
சவாலே சமாளி (2015 திரைப்படம்) | திவ்யா | |||
பசங்க 2 (திரைப்படம்) | வித்யா அகில் | |||
2016 | ஜாக்சன் துரை (திரைப்படம்) | விஜி | ||
2018 | பக்கா | நதியா | ||
2019 | கழுகு 2 | மெர்லி | ||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.