Remove ads
From Wikipedia, the free encyclopedia
நட் எமில் உலுண்ட்மார்க் (Knut Emil Lundmark, 14 சூன் 1889 - 23 ஏப்பிரல் 1958) ஒரு சுவீடிய வானியலாலர் ஆவார். இவர் 1929 முதல் 1955 வரை உலுண்டு பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகவும் உலுண்டு வான்காணகத் தலைவராகவும் இருந்தார்.
நட் உலுண்ட்மார்க் Knut Lundmark | |
---|---|
1908 இல் மாணவர் உலுண்ட்மார்க் | |
பிறப்பு | df=yes|1889|6|14 ஐவ்சுபின், சுவீடன் |
இறப்பு | df=yes|1958|4|23|1889|6|14 உலுண்டு, சுவீடன் |
தேசியம் | சுவீடியர் |
பணி | வானியல் |
உலுண்ட்மார்க் உப்சாலா பல்கலைக்கழகத்தில் உப்சாலா வான்காணகத்தில் வானியல் கல்வியைப் பெற்றார். இவரது ஆய்வுரை (1920) தலைப்பு : The relations of the globular clusters and spiral nebulae to the stellar system என்பதாகும்.இவர் 1920 களில் அமெரிக்காவில் பல வான்காணகங்களில், குறிப்பாக, இலிக் வான்காணகத்திலும் மவுண்ட் விலசன் வான்காணகத்திலும் பணிபுரிந்துள்ளார்.
பால்வெளிகளையும் அவற்றின் தொலைவுகளையும் ஆய்வு செய்த முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.இவர்தான் முதலில் பால்வெளிகளை, நமது பால்வழியில் இல்லாத, ஆனால் நெடுந்தொலைவில் அமைந்த உடுக்கண அமைப்புகள் என ஐயப்பட்டார். இவர் 1919 இல் எம்31 எனப்படும் ஆந்திரமேடா பால்வெளியின் தொலைவை 650,000 ஒளியாண்டுகள் ஆகும் என அளந்து முடிவு செய்தார். இம்மதிப்பு இன்றைய மதிப்பில் நான்கில் ஒரு பங்காகும். இதற்கு எம்31 இல் உள்ள வளிம ஒண்முகில்களின் பருமைகளை, தொலைவு அறிந்த அருகில் அமைந்தவற்றின் பருமைகளுடன் ஒப்பிட்டறிந்தார். இவரது பணி பின்னர் எழும்பிய வானியல் பெருவிவாதத்துக்கு வழிவகுத்தது.
இவர் பால்வெளிகளின் ஒளிபரவலையும் ஆய்வு செய்தார். இவர் பால்வெளிகள் பேரளவு ஒளிதடுக்கும் முகில்களைப் பெற்றிருந்தாலொழிய, அவற்றின் ஒளிபரவலைச் சரியாக விளக்குதல் அரிது எனக் கண்டுபிடித்தார் .
சுவீடன் நாட்டுத் தொழில்முறை வானியலாளர்களில் இவர் வானியலை மக்களுக்கு விளக்குவதில் வல்லவர். இப்பனியை 1930 கலில் இருந்தே தொடர்ந்து செய்தார். இவர் சுவீடன் தேசிய வானொலியிலும் தோன்றி மக்கலுக்கு வானியலையும் அறிவியல் வரலாற்றையும் பரப்பினார். சுவீடனில் பலதலைமுறைகலை இவர் வானியலில் ஆர்வம் கொள்ளச் செய்தார்.
உலுண்ட்மார்க் நிலாக் குழிப்பள்ளமும் குறுங்கோள் 1334 உலுண்ட்மார்க்காவும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன.[1] The வுல்ஃப்-உலுண்ட்மார்க்-மெலோட்டி பால்வெளி இவர் பெயரோடு, மேக்சு வுல்ஃப், பிலிபர்ட் யாக்குவசு மெலோட்டி ஆகியவர்களின் பெயர்களையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.