இராணுவ அதிகாரி மற்றும் வணிகர் From Wikipedia, the free encyclopedia
பெனடிக்ட் ஆர்னோல்டு (Benedict Arnold, 14 சனவரி [யூ.நா. 3 சனவரி] 1741[1] – சூன் 14, 1801) என்பவர் அமெரிக்கப் புரட்சிப் போரில் அமெரிக்க விடுதலைப் படையில் ஒரு படைத்தளபதியாகப் பணியாற்றியவர். இவர் பின்னர் அமெரிக்கப் படையில் இருந்து விலகி பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். அமெரிக்க இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றும் போது, இவர் நியூயார்க் மேல் முனையில் உள்ள கோட்டைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவி ஏற்று, அவற்றை பிரித்தானியப் படைகளிடன் சரணடைய வைக்கத் திட்டமிட்டிருந்தார்.
பெனடிக்ட் ஆர்னோல்டு Benedict Arnold | |
---|---|
ஜான் டிரம்புல் என்பவரால் வரையப்பட்ட ஓவியம் | |
பிறப்பு | நோர்விச், கனெடிகட் குடியேற்றம், பிரித்தானிய அமெரிக்கா | சனவரி 14, 1741
இறப்பு | சூன் 14, 1801 60) இலண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை
அடக்கம் | புனித மேரி கோவில், இலண்டன் |
சார்பு | United States (1775–1780) பெரிய பிரித்தானியா / பிரித்தானியப் பேரரசு (1780–1781) |
சேவை/ |
|
சேவைக்காலம் |
|
தரம் |
|
கட்டளை |
|
போர்கள்/யுத்தங்கள் | அமெரிக்கப் புரட்சிப் போர்
விடுதலை இராணுவம்:
பிரித்தானிய இராணுவம்
|
துணை(கள்) |
|
கையொப்பம் |
ஆர்னோல்டு கனெடிகட் குடியேற்றத்தில் பிறந்தவர். 1775 இல் போர் ஆரம்பித்த காலத்தில் இவர் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். பாஸ்டனுக்கு வெளியே பரவியிருந்த இராணுவத்தில் இணைந்து, தனது துணிச்சலான, புத்திக்கூர்மையான செயல்களால் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். 1775 இல் திக்கொண்டெரோகா கோட்டையைக் கைப்பற்றியமை[2], 1776 இல் சாம்பிளையின் நதியில் உள்ள வால்க்கூர் தீவில் இடம்பெற்ற சமரில் (அமெரிக்கப் படைகள் நியூயார்க் பாதுகாப்புகளை ஏற்படுத்த கால அவகாசமெடுக்க) தற்காப்பு மற்றும் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்கள்[3], கனெடிகட் ரிட்ச்ஃபீல்டு சமர் (இச்சமரில் இவரது பங்களிப்புக்காக பணித்தலைவராக பதவி உயர்வு பெற்றார்), இசுட்டான்விக்சு கோட்டை முற்றுகையில் நிவாரண நடவடிக்கைகள், 1777 இல் சரட்டோகா சண்டைகள் (இச்சமரில் இவர் காயமடைந்ததால் பல ஆண்டுகள் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை)[4] போன்ற முக்கிய போர் நிகழ்வுகளில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
போர்களில் ஆர்னோல்ட் பல வெற்றிகளைப் பெற்ற போதும், அவருக்குப் பதவி உயர்வுகள் வழங்குவதில் அன்றைய சட்டமன்றம் பின் நின்றது. இவரது பல வெற்றிகளை வேறு அதிகாரிகள் தமது சாதனைகளாக உரிமை கோரினர்.[5] இராணுவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் இவரது எதிரிகள் ஊழல், மற்றும் பிற குற்றச்சாட்டுகளை இவர் மீது முன்வைத்தனர், ஆனாலும் முறையான விசாரணைகளின் போது இவற்றில் பெரும்பான்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார். இவரது கணக்குகளை விசாரணை செய்த அமெரிக்கக் காங்கிரசு, இவர் காங்கிரசுக்கு கடன்பட்டிருந்ததாக முடிவு செய்தது. இதனாலும், பிரான்சுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்தமையாலும், 1778 இல் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு முழு சுயநிர்ணய உரிமை வழங்குவதற்கான முன்மொழிவை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொள்ளாமையினாலும் ஆர்னோல்டு விரக்தி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க இராணுவத்தில் இருந்து விலகி, எதிரணியான பிரித்தானிய இராணுவத்துடன் சேர பிரித்தானியாவுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
1780 சூலையில், நியூயார்க்கின் மேற்கு முனையின் (West Point) தளபதியாக நியமிக்கப்பட்டார். பிரித்தானியாவிடம் அக்கோட்டையை சரணடைய வைப்பதே அவரது நோக்கமாக இருந்தது, ஆனாலும், அமெரிக்கப் படைகள் ஜான் அந்திரே என்ற பிரித்தானியப் படைத்துறைத் தளபதியைக் கைது செய்த போது அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சில ஆவணங்களில் இருந்து ஆர்னோல்டின் சதித் திட்டம் வெளிவந்தது.[6] அந்திரே கைது செய்யப்பட்டதை அறிந்த ஆர்னோடு, தலைமறைவானார்.
பெனடிக்ட் ஆர்னோல்டின் நடவடிக்கைகள் சான்றுகளுடன் வழங்கப்பட்டபோது சியார்ச் வாசிங்டன் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சான்றுகளை அவர் விசாரித்து, ஆர்னோல்டை ஆந்திரேயிற்காக பரிமாற்றம் செய்ய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தளபதி கிளின்டனுக்கு அறிவுறுத்தினார். கிளின்டன் இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இராணுவ விசாரணையை அடுத்து அந்திரே 1780 அக்டோபர் 2 இல் தூக்கிலிடப்பட்டார். வாசிங்டன் ஆர்னோல்டைக் கைது செய்வதற்குத் தனது ஆட்களை நியூயார்க்கிற்கு அனுப்பினார். ஆனாலும் ஆர்னோல்டு தனது இருப்பிடங்களை மாற்றி, டிசம்பரில் வர்ஜீனியாவுக்குத் தப்பி ஓட முடிந்தது.[7]
ஆர்னோல்டு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வெளியிட்ட திறந்த அறிக்கை 1780 அக்டோபரில் பத்திரிகைகளில் வெளியானது.[8] ஆர்னோல்டு இறுதியாக, அட்சன் ஆறு வழியாக பிரித்தானியாவின் வல்ச்சர் கப்பலில் தப்பி வெளியேறினார்.[9] இதன் மூலம் அவர் சியார்ச் வாசிங்டனின் படைகளிடம் இருந்து தப்ப முடிந்தது. தனது மனைவி பெகியை பிலடெல்பியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக சேர்க்கும் படி கப்பலில் இருந்து ஆர்னோல்டு சியார்ச் வாசிங்டனுக்கு கடிதம் எழுதினார்.[10] இக்கோரிக்கையை வாசிங்டன் ஏற்றுக் கொண்டார்[11]
ஆர்னோல்டு பிரித்தானிய இராணுவத்தில் படைப்பகுதித் தளபதியாகப் பதவி உயர்வு பெற்று, £360 ஆண்டு ஓய்வூதியமும், £6,000 இற்கும் அதிகமான உதவித் தொகையும் பெற்றார்.[12] இவர் வர்ஜீனியாவில் நடத்தப்பட்ட முற்றுகைகளில் பிரித்தானியப் படைகளை முன்னின்று வழிநடத்தினார். அத்துடன், கனெடிகட்டில் நடந்த குரோட்டன் சமரில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டார். 1782 இல், இவர் தனது இரண்டாவது மனைவி மார்கரெட் பெக்கி உடன் இலண்டன் சென்றார். அங்கு இவருக்கு மூன்றாம் ஜார்ஜ் மன்னராலும், டோரி கட்சியினராலும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனாலும், விக் கட்சியினர் இவரை வரவேற்கவில்லை. 1787 இல், இவர் தனது மகன்களான ரிச்சார்டு, என்றி ஆகியோருடன் இணைந்து தனது வணிகத் தொழிலில் ஈடுபட நியூ பிரன்சுவிக் திரும்பினார். 1791 இல் நிரந்தரமாக தங்குவதற்காக இலண்டன் திரும்பினார். 10 ஆண்டுகளின் பின்னர் இவர் 1801 இல் தனது 60வது அகவையில் காலமானார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.