From Wikipedia, the free encyclopedia
சூரியக் குடும்பத்தின் விண்பொருட்கள், அதன் சுற்று வட்டப் பாதையால் அல்லது சுற்று வட்டப் பாதை விலகலால் புவிக்கு அருகில் வரும் போது அவை புவியருகு விண்பொருட்கள் (Near-Earth object) என அழைக்கப்படுகிறது. சூரியனிடமிருந்து 1.3 வானியல் அலகு தூரத்தில் சுற்று வட்டப் பாதையில் உள்ள அனைத்து விண்பொருட்களும் புவியருகு விண்பொருட்கள்.அவை ஆயிரக்கனக்கான புவியருகு சிறுகோள்கள், புவியருகு வால்நட்சத்திரங்கள் மற்றும் சூரியன் சார்ந்த கோள்களைச் சுற்றி வரும் விண்கலன்கள் ஆகும்.இவை புவியைத் தாக்குவதற்கு சில காலம் முன்பே அதைக் கணித்து, பின் கண்காணிக்கப்படும்.இதற்கு முன் இதுபோல் தாக்கிய விண் பொருட்களால் நமது புவியின் மேற்பரப்பில் ஏற்பட்ட சேதத்தை நம்மால் இன்றும் காண முடிகிறது[2].1980 க்கு பின் புவியருகு விண்பொருட்களின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் இது போன்ற விண்பொருட்கள் நம்மைத் தாக்கும் போது அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது[3].
சூரியனிடமிருந்து 0.983 முதல்1.3 வானியல் அலகு வரை தூரத்தில் சுற்று வட்டப் பாதை உள்ள அனைத்துச் சிறுகோள்களும் புவியருகு சிறுகோள்கள் ஆகும்.ஒரு சிறுகோள் கண்டறியப்பட்டவுடன், உலகளாவிய வானியல் ஒன்றியத்தின் சிறுகோள்கள் துறையில் பதிவு செய்யப்பட்டு, பின் அட்டவணைப்படுத்தப்படும்.சில புவியருகு சிறுகோள்கள் புவியின் வட்டப்பாதையில் குறுக்கிட்டு புவியுடன் மோதிக்கொள்ளும் அபாயம் உண்டு[4]. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகள், புவியருகு விண்பொருட்களை கண்டறிந்து வருகிறார்கள்.
1 கிமீ க்கு மேல் அகலமுள்ள அனைத்து புவியருகு விண்பொருட்களையும் அதில் புவியின் மேல் மோதி சேதம் விளைவிக்கும் விண்பொருட்களையும் கண்டறிய நாசாவுக்கு ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஆனை பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 2014 வரை 867 புவியருகு விண்பொருட்களும் அதில் 154 புவியைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும் விண்பொருட்கள் (Potentially hazardous objects) என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சேதம் விளைவிக்கும் விண்பொருட்கள் என்பது புவியை நோக்கி வரும் விண்பொருட்களில் புவியைத் தாக்கினால் அதிக சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் மிகுந்த விண்பொருட்கள் ஆகும்.பெரும்பான்மையாகப் புவிக்கு அருகில் 0.05 வானியல் அலகும் அதற்கு குறைவான தொலைவிலும் தனது சுற்றுப் பாதையை உடைய மற்றும் தனிப்பருமை (Absolute magnitude) 22 க்கு மேல் உள்ள விண்பொருள்கள் ஆகும்.
2012 வரை , மூன்று புவியருகு விண்பொருட்களை விண்கலங்கள் பார்வையிட்டுள்ளன.
மனிதர்களுக்குப் புவியருகு விண்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.அளவில் பெரிய ஒரு சிறுகோள் புவியைத் தாக்கினால் கூட மனித இனமே அழியும் அபாயம் இருக்கிறது.
(89959) 2002 என்டி7 என்ற சிறுகோள் ஜனவரி 13, 2019 இல் இது புவியை தாக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது. (29075) 1950 டிஏ (29075) 1950 DA) என்ற சிறுகோள் 2002 ல் கணிக்கப்பட்டதன் படி, இது 2880ல் புவியைத் தாக்குமெனவும் அதனால் சேதம் அதிகமாக இருக்கும் எனவும் கணித்தனர். ஆனால் 2013ல் கணிக்கப்பட்டதன் படி, 4000 ல் 1 பங்கு (0.025%) இது பூமியை தாக்க வாய்ப்புள்ளது எனக் கணித்துள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.